Tamilnadu is located on the southern part of India. It is bounded by the Bay of Bengal on the east, and by Kerala, Karnataka and Andhra Pradesh states on the other three sides.
திருச்செங்கோட்டிலிருந்து 16 கி.மீ தொலைவிலும், நெசவுத் தொழில் சிறந்து விளங்கும் பள்ளிபாளையத்திலிருந்து 10 கி.மீ தொலைவில், கங்கையினும் புனிதமான காவிரி நதிக் கரையில் கொக்கராயான் காண் என வாகீச பெருமானால் பாடப் பெற்றதும் , செங்கல் தொழிலில் சிறந்து விளங்குவதுமான கொக்கராயன் பேட்டையில் 2000 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த சோழ மன்னர்களால் கட்டப் பெற்ற ஸ்ரீ சௌந்தர நாயகி சமேத ஸ்ரீ பிரம்மலிங்கேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
படைத்தல் தெய்வமாகிய பிரம்மனுக்கு திரேதா யுகத்தில் பிரம்மகர்த்தி தோஷம் ஏற்பட்ட போது நான் முகனே இத்திருத்தலதில் 48 நாட்கள் தங்கியிருந்து திருத்தல இறைவனை நெய் தீபம் வழிபட்டதால் தோஷம் நீங்கப் பெற்ற காரணத்தால் இத்திருத்தலத்திற்கு ஸ்ரீ பிரம்மலிங்கேஸ்வரர் திருக்கோயில் என பெயர் வழங்கி வருகிறது.
சான்னித்யம் மிக்க இத்திருத்தலத்தின் மகிமைகளை கூறினால் ஏராளமாகக் கூறலாம்.
அருட் செல்வர்களே !
பற்பல விசேஷங்கள் பொருந்திய இத்திருத்தலத்தில் ராஜகோபுரம், துவஜஸ்தம்பம் ஆகிய திருப்பணிகள் செய்யப்படவும், கும்பாபிஷேகம் நடைபெறவும் அதிக அளவில் நிதி தேவைப்படுகிறது. புதிய ஆலயம் ஒன்றை நிர்மாணிப்பதைக் காட்டிலும் தொன்மை வாய்ந்த திருத்தலங்களை திருப்பணி செய்வதால் கிடைக்கும் புண்ணியமானது "அஸ்வமேதயாகம்" செய்யும் பலனை விட அதிகமானது. திருக்கோயில் திருப்பணிகென்று ஒரே ஒரு செங்கலையோ, ஒரு பிடி மணலையோ கொடுத்தால் கூட அப்புண்ணியம் பல தலைமுறைக்கு நமது சந்ததிகளைக் காக்கும்.
Copyright © 2011 www.shivatemples.com - All rights reserved.
Last Update: 18th September 2011