Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

இடையாற்றுநாதர் கோவில், திருவிடையாறு

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருவிடையாறு (தற்போது டி. எடையார் என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்இடையாற்றுநாதர், இடையாற்றீஸ்வரர், மருதீஸ்வரர்
இறைவி பெயர்சிற்றிடைநாயகி
பதிகம்சுந்தரர் - 1
எப்படிப் போவது திருக்கோயிலூரிலிருந்து திருவெண்ணெய்நல்லூர் வழியாக அரசூர் செல்லும் பாதையில் (SH68) சித்தலிங்க மடத்தையடுத்து இடையாறு உள்ளது. கோயில் சாலையோரத்தில் உள்ளது. மற்றொரு சிவஸ்தலமான திருவெண்ணைநல்லூர் இங்கிருந்து தென்கிழக்கே 5 கி.மி. தொலைவில் அரசூர் செல்லும் பாதையில் உள்ளது.
விழுப்பரத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை செல்லும் தேசீய நெடுஞ்சாலையில் (NH 45) அரசூரை அடைந்து அங்கிருந்து வலதுபுறம் மாநில நெடுஞ்சாலை SH68ல் சென்றும் திருவெண்ணைநல்லூர் வழியாக திருவிடையாறு தலத்தை அடையலாம்.
ஆலய முகவரி அருள்மிகு மருதீஸ்வரர் திருக்கோவில், மருதீஸ்வரர் தேவஸ்தானம்
டி.எடையார் அஞ்சல்
திருக்கோவிலூர் வட்டம்
விழுப்புரம் மாவட்டம்
PIN - 607203