புஷ்பவன நாதர் கோவில், திருப்பூந்துருத்தி
தென்னாடுடைய சிவனே போற்றி| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | திருப்பூந்துருத்தி |
| இறைவன் பெயர் | புஷ்பவன நாதர் |
| இறைவி பெயர் | சௌந்தர்ய நாயகி, அழகாலமர்ந்த நாயகி |
| பதிகம் | திருநாவுக்கரசர் - 3 |
| எப்படிப் போவது | அஷ்ட வீரட்டான ஸ்தலங்களில் ஒன்றான திருக்கண்டியூர் என்ற சிவஸ்தலத்தில் இருந்து 4 கி.மி. தொலைவில் திருப்பூந்துருத்தி இருக்கிறது. திருவையாற்றில் இருந்து சுமார் 7 கி.மி. தொலைவில் உள்ளது. |
திருநாவுக்கரசர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய மூன்று பதிகங்களில் நில்லாத நீர்சடைமேல் என்று தொடங்கும் பதிகத்தில் இருந்து ஒரு பாடல்:
எனக்கென்றும் இனியானை யெம்மான் தன்னை யெழிலாரும் ஏகம்பம் மேயான் தன்னை மனக்கென்றும் வருவானை வஞ்சர் நெஞ்சில் நில்லானை நின்றியூர் மேயான் தன்னைக் தனக்கென்றும் அடியேனை யாளாக் கொண்ட சங்கரனைச் சங்கவார் குழையான் தன்னைப் புனக்கொன்றைத் தாரணிந்த புனிதன் தன்னைப் பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.