Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

உமா மஹேஸ்வரர் கோவில், திருநல்லம் (கோனேரி ராஜபுரம்)

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருநல்லம் (தற்போது கோனேரி ராஜபுரம் என்ற பெயரில் அறியப்படுகிறது)
இறைவன் பெயர்உமா மஹேஸ்வரர், மாமனி ஈஸ்வரர்
இறைவி பெயர்மங்கள நாயகி, அங்கவள நாயகி
பதிகம்திருநாவுக்கரசர் - 1
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது கும்பகோணம் - மயிலாடுதுறை ரயில் மார்க்கத்தில் உள்ள ஆடுதுறை ரயில் நிலையத்தில் இருந்து 8 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து வடமட்டம் செல்லும் நகரப் பேருந்தில் சென்று கோனேரிராஜபுரம் கூட்டுரோடில் இறங்கி 1 கி.மி. சென்றால் இத்தலத்தை அடையலாம். அருகில் உள்ள பெரிய ஊர்கள் கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறை.

கோவில் விபரம்: முன்பு செங்கல்லால் கட்டப்பட்டிருந்த இக்கோவிலை கற்றளிக் கோவில் ஆக்கிய பெருமை கண்டராதித்த சோழனின் மனைவி செம்பியன் மாதேவி ஆவார். மூலவர் உமாமகேசுவரர் சந்நிதி மேற்குப் பார்த்து உள்ளது. இக்கோவிலில் உள்ள மூலவர் உமாமகேசுவரர் மற்றும் மங்களநாயகின் சந்நிதியைத் தவிர இக்கோவிலில் உள்ள நடராஜர் திரு உருவம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த செப்புச் சிலை நடராஜர் சுமார் 9 அடி உயரம் உள்ளவர். நடராஜருக்கு ஏற்ற உயரத்தில் சிவகாமி அம்மைக்கும் செப்புச் சிலை உள்ளது. உற்சவ காலங்களில் தெரு உலா வருவதற்காக ஒரு சிறிய நடராஜர் செப்புச் சிலையும் இருக்கிறது. பெரிய நடராஜர் செப்புச் சிலை உருவம் மிகவும் கலை அழகுடன் காட்சி அளிக்கிறது. கோவிலின் வெளியே சக்தி தீர்த்தம் அமைந்திருக்கிறது. பூமாதேவி இத்தலத்து இறைவனை வழிபட்டிருக்கிறாள். தக்ஷினாமூர்த்தி, சூரியன், சந்திரன் ஆகியோருக்கும் இங்கு தனி சந்நிதிகள் இருக்கின்றன.