Shiva Temples of Tamilnadu
தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
சங்காரண்யேஸ்வரர் கோவில், திருதலைச்சங்காடு
தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | திருதலைச்சங்காடு |
| இறைவன் பெயர் | சங்காரண்யேஸ்வரர் |
| இறைவி பெயர் | சௌந்தரநாயகி, பிரஹத் சுந்தராம்பிகை |
| பதிகம் | திருஞானசம்பந்தர் - 1 |
| எப்படிப் போவது | மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 21 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. அருகில் திருஆக்கூர் என்ற பாடல் பெற்ற ஸ்தலம் இருக்கிறது. 108 திவ்யதேசங்களில் ஒன்றான திருதலைச்சங்க நான்மதியம் என்ற கோவிலும் சிவன் கோவிலில் இருந்து அருகாமையில் உள்ளது. திருக்கடையூரில் இருந்து சுமார் 8 கி.மி. வடக்கே பயணம் செய்தும் இத்தலத்தை அடையலாம். |
| ஆலய முகவரி | அருள்மிகு சங்காரண்யேசுவரர் திருக்கோயில் தலைச்சங்காடு ஆக்கூர் அஞ்சல் தரங்கம்பாடி வட்டம் நாகப்பட்டிணம் மாவட்டம் PIN - 609301 இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் பகல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும். ஆலய குருக்கள் வீடு அருகில் இருப்பதால் அவரை தொடர்பு கொண்டு எந்நேரமும் தரிசிக்கலாம். ஆலய அர்ச்சகர் தொலைபேசி: 04364 280757 |
கோச்செங்கட் சோழனால் யானை நுழைய முடியாத அளவுக்கு வாசல் கொண்டு கட்டப்பட்ட மாடக் கோவில்களில் திருதலைச்சங்காடு சங்காரண்யேஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும். கோவிலுக்கு இராஜகோபுரம் இல்லை. ஒரு நுழைவாயில் மட்டுமே உள்ளது. கிழக்கிலுள்ள நுழைவாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் வெளிப் பிரகாரத்தில் நேர் எதிரே நந்தி மண்டபம் மற்றும் பலிபீடத்தைக் காணலாம். பலிபீடத்தின் பின்னால் சற்று உயரமான மேடையில் இறைவன் சங்காரண்யேஸ்வரர் சந்நிதி அமைந்துள்ளது. தெற்கு வெளிப் பிரகாரத்தில் உள்ள வாயில் வழியே படிகளேறி இறைவன் சந்நிதி உள்ள முன் மண்டபத்திற்குச் செல்ல வேண்டும். முன் மண்டபத்தைக் கடந்து சென்றால் கருவறையில் சங்காரண்யேஸ்வரர் லிங்க உருவில் காட்சி தருகிறார். மூலவர் சங்காரண்யேஸ்வரருக்கு நல்லெண்ணை ஊற்றி அபிஷேகம் செய்யும் போது விளக்கு வெளிச்சத்தில் பார்த்தால் லிங்கத்தின் மீது மயிர்க்கால்கள் தெரியும் சிறப்புடையது இத்தலம். கருவறை சுற்றில் ஸ்ரீசண்டிகேஸவரர், மஹாவிஷ்ணு, ஸ்ரீஜுரஹரர், ஸ்ரீராமர் சீதை மற்றும் தேவார நால்வர் உருவச் சிலைகளைக் காணலாம்.
தெற்கு வெளிப் பிரகாரத்தில் விநாயகர் சந்நிதியும், மேற்கு வெளிப் பிரகாரத்தில் முருகர் சந்நிதியும், வடக்கு வெளிப் பிரகாரத்தில் சண்டிகேஸ்வரருக்கு தனி சந்நிதியும் உள்ளன. மேற்கு வெளிப் பிரகாரத்தில் தனி சந்நிதியில் மஹாவிஷ்ணு சீதேவி, பூதேவி சமேதராய் காட்சி தருகிறார். மஹாவிஷ்ணு இத்தலத்தில் சங்காரண்யேஸ்வரரரை வழிபட்டு தனது ஆயுதமாக பாஞ்சசன்னிய சங்கைப் பெற்ற சிறப்புடையது இத்தலம். கிழக்கு வெளிப் பிரகாரத்தில் வலதுபுறம் தெற்கு நோக்கிய இறைவி சௌந்தரநாயகி சந்நிதி அமைந்துள்ளது. இறைவி கருவறை வாயிலின் வெளியே இடதுபுறம் புவனேஸ்வரியின் தனி சந்நிதி அமைந்துள்ளது.
கோயில் சோமாஸ்கந்தர் அமைப்பில் அமைந்துள்ளது. அதாவது கோயிலில் நுழைந்தவுடன் இடது பக்கம் சிவன் சன்னதியும், நடுவில் முருகன் சன்னதியும், வலது பக்கம் அம்மன் சன்னதியும் உள்ளதைக் காணலாம். இத்தலத்தின் தல விருட்சம் புரச மரம். புரச மரத்தின் அடியில் ஒரு சிவலிங்கம், மற்றும் விநாயகர் திரு உருவங்களைக் காணலாம். ஆலயத்தின் தீர்த்தம் சங்குதீர்த்தம். இது கோவிலுக்கு எதிரில் உள்ளது. இத்தீர்த்தத்தில் பௌர்ணமி நாளில் நீராடுவது விசேஷமாகும்.
| திருதலைச்சங்காடு சங்காரண்யேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள் | ||
|---|---|---|
![]() கோவிலின் கிழக்கு நுழைவு வாயில் |
![]() கிழக்கு வெளிப் பிரகாரத்தில் பலிபீடம், நந்தி மண்டபம் |
|
![]() இறைவன் கருவறை மூலவர் உள்ள இடம் |
![]() சங்காரண்யேஸ்வரர் சந்நிதி |
|
![]() ஸ்ரீசண்டிகேஸவரர், மஹாவிஷ்ணு, ஸ்ரீஜுரஹரர், ஸ்ரீராமர் சீதை |
![]() நால்வர் சந்நிதி |
|
![]() தெற்கு வெளிப் பிரகாரத்தில் விநாயகர் சந்நிதி |
![]() சீதேவி, பூதேவி சமேதராய் மஹாவிஷ்ணு |
|
![]() கிழக்கு வெளிப் பிரகாரத்தில் சௌந்தரநாயகி சந்நிதி |
![]() மேற்கு வெளிப் பிரகாரத்தில் முருகர் சந்நிதி | |
திருஞானசம்பந்தர் பாடியருளியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் இரண்டாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
நலச்சங்க வெண்குழையுந் தோடும்பெய்தோர் நால்வேதஞ் சொலச்சங்கை யில்லாதீர் சுடுகாடல்லால் கருதாதீர் குலைச்செங்காய்ப் பைங்கமுகின் குளிர்கொள்சோலைக் குயிலாலுந் தலைச்சங்கைக் கோயிலே கோயிலாகத் தாழ்ந்தீரே. துணிமல்கு கோவணமுந் தோலுங்காட்டித் தொண்டாண்டீர் மணிமல்கு கண்டத்தீர் அண்டர்க்கெல்லாம் மாண்பானீர் பிணிமல்கு நூல்மார்பர் பெரியோர்வாழுந் தலைச்சங்கை அணிமல்கு கோயிலே கோயிலாக அமர்ந்தீரே. சீர்கொண்ட பாடலீர் செங்கண்வெள்ளேற் றூர்தியீர் நீர்கொண்டும் பூக்கொண்டு நீங்காத்தொண்டர் நின்றேத்தத் தார்கொண்ட நூல்மார்பர் தக்கோர்வாழுந் தலைச்சங்கை ஏர்கொண்ட கோயிலே கோயிலாக இருந்தீரே. வேடஞ்சூழ் கொள்கையீர் வேண்டிநீண்ட வெண்டிங்கள் ஓடஞ்சூழ் கங்கையும் உச்சிவைத்தீர் தலைச்சங்கைக் கூடஞ்சூழ் மண்டபமுங் குலாயவாசல் கொடித்தோன்றும் மாடஞ்சூழ் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே. சூலஞ்சேர் கையினீர் சுண்ணவெண்ணீ றாடலீர் நீலஞ்சேர் கண்டத்தீர் நீண்டசடைமேல் நீரேற்றீர் ஆலஞ்சேர் தண்கானல் அன்னமன்னுந் தலைச்சங்கைக் கோலஞ்சேர் கோயிலே கோயிலாகக் கொண்டீரே. நிலநீரொ டாகாசம் அனல்காலாகி நின்றைந்து புலநீர்மை புறங்கண்டார் பொக்கஞ்செய்யார் போற்றோவார் சலநீத ரல்லாதார் தக்கோர்வாழுந் தலைச்சங்கை நலநீர கோயிலே கோயிலாக நயந்தீரே. அடிபுல்கு பைங்கழல்கள் ஆர்ப்பப்பேர்ந்தோர் அனலேந்திக் கொடிபுல்கு மென்சாயல் உமையோர்பாகங் கூடினீர் பொடிபுல்கு நூல்மார்பர் புரிநூலாளர் தலைச்சங்கைக் கடிபுல்கு கோயிலே கோயிலாகக் கலந்தீரே. திரையார்ந்த மாகடல்சூழ் தென்னிலங்கைக் கோமானை வரையார்ந்த தோளடர விரலாலூன்றும் மாண்பினீர் அரையார்ந்த மேகலையீர் அந்தணாளர் தலைச்சங்கை நிரையார்ந்த கோயிலே கோயிலாக நினைந்தீரே. பாயோங்கு பாம்பணைமே லானும்பைந்தா மரையானும் போயோங்கிக் காண்கிலார் புறம்நின்றோரார் போற்றோவார் தீயோங்கு மறையாளர் திகழுஞ்செல்வத் தலைச்சங்கைச் சேயோங்கு கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே. அலையாரும் புனல்துறந்த அமணர்குண்டர் சாக்கியர் தொலையாதங் கலர்தூற்றத் தோற்றங்காட்டி யாட்கொண்டீர் தலையான நால்வேதந் தரித்தார்வாழுந் தலைச்சங்கை நிலையார்ந்த கோயிலே கோயிலாக நின்றீரே. நளிரும் புனற்காழி நல்லஞான சம்பந்தன் குளிருந் தலைச்சங்கை ஓங்குகோயில் மேயானை ஒளிரும் பிறையானை யுரைத்தபாட லிவைவல்லார் மிளிருந் திரைசூழ்ந்த வையத்தார்க்கு மேலாரே.










