Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

தான்தோன்றியப்பர் கோவில், திருஆக்கூர்

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருஆக்கூர்
இறைவன் பெயர்தான்தோன்றியப்பர், சுயம்புநாதர்
இறைவி பெயர்வாள்நெடுங்கண்ணி
பதிகம்திருநாவுக்கரசர் - 1
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது மயிலாடுதுறையில் இருந்து கிழக்கே 17 கி.மி. தொலைவில் இருக்கிறது. திருதலைச்சங்காடு என்ற பாடல் பெற்ற ஸ்தலம் இங்கிருந்து 2 கி.மி. தூரத்தில் இருக்கிறது.


கோச்செங்கட் சோழன் தனது முன்பிறவியில் யானையினால் ஏற்பட்ட இடர் காரனமாக, யானை ஏறாத, ஏறமுடியாத மாடக் கோவில்கள் 70 கட்டினான் என்று வரலாறு கூறுகிறது. ஆக்கூர் தான்தோன்றியப்பர் கோவிலும் ஒரு மாடக் கோவில். இங்கு குடிகொண்டுள்ள தான்தொன்றியப்பர் ஒரு சுயம்பு லிங்கம் ஆவார். இறைவி வாள்நெடுங்கண்ணியின் சந்நிதி மூலவர் சந்நிதிக்கு அருகிலேயே இருக்கிறது.