Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

வர்த்தமானேஸ்வரர் கோவில், திருப்புகலூர் வர்த்தமானீச்சரம்

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருப்புகலூர் வர்த்தமானீச்சரம்
இறைவன் பெயர்வர்த்தமானேஸ்வரர்
இறைவி பெயர்கருந்தாழ்குழலி, மனோன்மனி
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது பாடல் பெற்ற ஸ்தலம் திருப்புகலூர் அக்னீஸ்வரர் ஆலயத்தின் உள்ளே கோணப்பிரான் சந்நிதிக்கு அருகில் இத்தலம் உள்ளது. திருப்புகலூர் நன்னிலத்தில் இருந்து 8 கி.மி. தொலைவில் உள்ளது.
ஆலய முகவரி நிர்வாக அதிகாரி
அருள்மிகு வர்த்தமானேஸ்வரர் திருக்கோவில்
திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் தேவஸ்தானம்
திருப்புகலூர் அஞ்சல்
வழி திருக்கண்ணபுரம்
நாகப்பட்டிணம் வட்டம்
நாகப்பட்டிணம் மாவட்டம்
PIN - 609704

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோயிலுக்குள்ளேயே திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் என்ற் மற்றொரு பாடல் பெற்ற தலம் உள்ளது. மூலவர் அக்னீஸ்வரர் சந்நிதிக்கு வலப்புறம் உள்ளது. இலகு இறைவன் வர்த்தமானேஸ்வரர் என்ற பெயருடன் எழுந்தருளியுள்ளார். சந்நிதியுள் நுழைந்ததும் இடதுபுறம் முருகநாயனார் சந்நிதியைக் காணலாம். வர்த்தமானேஸ்வரரை சம்பந்தர் மட்டுமே பாடியுள்ளார். அவரின் பதிகக் கல்வெட்டு சந்நிதியில் உள்ளது. வர்த்தமானேஸ்ரரை சிவலிங்கத் திருமேனி அழகான மூர்த்தி. அம்பாள் மனோன்மணி சிறிய அழகான சந்நிதியில் எழுந்தருளியுள்ளாள்.