Site search
powered by FreeFind

Main Menu

Tamilnadu Location
tamilnadu location in india

Tamilnadu is located on the southern part of India. It is bounded by the Bay of Bengal on the east, and by Kerala, Karnataka and Andhra Pradesh states on the other three sides.

கோவில் திருப்பணிக்கு உதவுங்கள் - ஓர் வேண்டுகோள்

திருச்செங்கோட்டிலிருந்து 16 கி.மீ தொலைவிலும், நெசவுத் தொழில் சிறந்து விளங்கும் பள்ளிபாளையத்திலிருந்து 10 கி.மீ தொலைவில், கங்கையினும் புனிதமான காவிரி நதிக் கரையில் கொக்கராயான் காண் என வாகீச பெருமானால் பாடப் பெற்றதும் , செங்கல் தொழிலில் சிறந்து விளங்குவதுமான கொக்கராயன் பேட்டையில் 2000 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த சோழ மன்னர்களால் கட்டப் பெற்ற ஸ்ரீ சௌந்தர நாயகி சமேத ஸ்ரீ பிரம்மலிங்கேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

படைத்தல் தெய்வமாகிய பிரம்மனுக்கு திரேதா யுகத்தில் பிரம்மகர்த்தி தோஷம் ஏற்பட்ட போது நான் முகனே இத்திருத்தலதில் 48 நாட்கள் தங்கியிருந்து திருத்தல இறைவனை நெய் தீபம் வழிபட்டதால் தோஷம் நீங்கப் பெற்ற காரணத்தால் இத்திருத்தலத்திற்கு ஸ்ரீ பிரம்மலிங்கேஸ்வரர் திருக்கோயில் என பெயர் வழங்கி வருகிறது.

சான்னித்யம் மிக்க இத்திருத்தலத்தின் மகிமைகளை கூறினால் ஏராளமாகக் கூறலாம்.

  • திருத்தல இறைவன் சுயம்புலிங்கம், வரப்பிரசாதி, சான்னித்யம் மிக்கவர், கருவறையில் அதிர்வலைகளை உணரலாம்.
  • சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக திருத்தில்லையில் உள்ளது போல் பாமா, ருக்மணி சமேத ஸ்ரீ வேணுகோபாலன் சந்நிதி ஆஞ்சநேயருடன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
  • இத் திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ பைரவர் நாய் வாகனமின்றி விளங்குகிறார் . இந்த அமைப்பு வேறு எங்கும் கிடையாது. சத்ரு தோஷ பரிகார மூர்த்தியாக விளங்குகிறார். பூரட்டாதி நட்ச்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டியவர்.
  • இத்திருத்தல இறைவி மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம் நிவர்த்தி செய்வதில் வரப்பிரசாதி.
  • இறைவன் கர்ப்ப கிரகத்தைச் சுற்றி 3 சுவர்களிலும் கற்கதவுகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் சாவி பொருத்துவதற்கான துளைகளும் உள்ளன. இது போன்ற அமைப்பு வேறெங்கும் கிடையாது.
  • "கல் கோழி கூவும், கல் கதவு திறக்கும், அப்போது கலியுகம் அழியும்" என்பது ஐதீகம்.
  • ஒரே கல்லால் செதுக்கப்பட்ட மிகப்பொ¢ய தீபஸ்தம்பம் உள்ளது.
  • ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகப் பெருமான், ஸ்ரீ தக்ஷ¢ணாமூர்த்தி, ஸ்ரீ லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர், நவ கிரஹங்கள், சூரிய பகவான், சப்த கன்னிமாதாக்கள், ஆகிய மூர்த்திகள் ஒருங்கே அமையப்பெற்ற சிவஸ்தலம். சனி பகவானுக்கு தனி சந்நிதி உள்ளது.
  • சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு விஜய நகரப்பேரரசை ஆண்டுவந்த கிருஷ்ணதேவராயர் இத்திருத்தலத்திற்கு வந்து வழிபட்டதற்கான அவர் காலத்து கல்வெட்டுகள் இங்கு காணப்படுகின்றன.

அருட் செல்வர்களே !

பற்பல விசேஷங்கள் பொருந்திய இத்திருத்தலத்தில் ராஜகோபுரம், துவஜஸ்தம்பம் ஆகிய திருப்பணிகள் செய்யப்படவும், கும்பாபிஷேகம் நடைபெறவும் அதிக அளவில் நிதி தேவைப்படுகிறது. புதிய ஆலயம் ஒன்றை நிர்மாணிப்பதைக் காட்டிலும் தொன்மை வாய்ந்த திருத்தலங்களை திருப்பணி செய்வதால் கிடைக்கும் புண்ணியமானது "அஸ்வமேதயாகம்" செய்யும் பலனை விட அதிகமானது. திருக்கோயில் திருப்பணிகென்று ஒரே ஒரு செங்கலையோ, ஒரு பிடி மணலையோ கொடுத்தால் கூட அப்புண்ணியம் பல தலைமுறைக்கு நமது சந்ததிகளைக் காக்கும்.

இவ்வளவு பிரசித்தி பெற்ற இத்திருத்தலத்திற்கு திருப்பணி செய்ய உதவிடுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
M.balachandar, kokkarayanpettai, cell : 8883740013