Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

வல்லநாதர் கோவில், திருவல்லம்

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருவல்லம் ( தற்போது திருவலம் என்று வழங்குகிறது )
இறைவன் பெயர்வில்வ நாதேஸ்வரர், வல்லநாதர்
இறைவி பெயர்தனுமத்யாம்பாள், வல்லாம்பிகை
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது இந்த சிவஸ்தலம் சென்னையில் இருந்து சுமார் 120 கி.மி. தொலைவில் உள்ளது. சென்னை - காட்பாடி ரயில் பாதையில் உள்ள திருவல்லம் ரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மி. தொலைவில் இருக்கிறது. அருகில் உள்ள ஊர் இராணிப்பேட்டை சுமார் 10 கி.மி. தொலைவில் உள்ளது. வாலாஜா, இராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு ஆகிய ஊர்களில் இருந்து திருவல்லம் செல்ல பேருந்து வசதிகள் உண்டு. திருவல்லம் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து மிக அருகில் ஆலயம் இருக்கிறது.
ஆலய முகவரி அருள்மிகு
வில்வ நாதேஸ்வரர் திருக்கோவில்
திருவலம் அஞ்சல்
வழி இராணிப்பேட்டை
காட்பாடி வட்டம்
வேலூர் மாவட்டம்
PIN - 632515