Shiva Temples of Tamilnadu
தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
சந்திரசேகரர் கோவில், திருவக்கரை
தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | திருவக்கரை |
| இறைவன் பெயர் | சந்திரசேகரர் |
| இறைவி பெயர் | வடிவாம்பிகை |
| பதிகம் | திருஞானசம்பந்தர் - 1 |
| எப்படிப் போவது | சென்னை எழும்பூர் - செங்கல்பட்டு - விழுப்புரம் ரயில் மார்க்கத்தில் உள்ள மயிலம் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 22 Km தொலைவில் திருவக்கரை சிவஸ்தலம் உள்ளது. மயிலத்தில் உள்ள முருகன் கோவிலும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். |
| ஆலய முகவரி |
அருள்மிகு சந்திரசேகரர் வக்ரகாளியம்மன் திருக்கோவில் திருவக்கரை வானூர் வட்டம் விழுப்புரம் மாவட்டம் PIN - 604304 |
சிவலிங்கத்தின் பாணப் பகுதியில் கிழக்கு, தெற்கு, வடக்கு ஆகிய மூன்று பக்கங்களிலும் முகம் கொண்ட லிங்கம் மும்முக லிங்கம் அனப்படும். இந்த முகங்களில் கிழக்கில் உள்ளது தத்புருஷ முகம், தெற்கில் உள்ளது அகோர முகம், வடக்கில் உள்ளது வாமதேவ முகம் என்று சொல்லப்படும். மூன்று முகங்களை உடைய இத்தகைய லிங்கத்தை பிரம்மா, விஷ்னு, ருத்ரன் ஆகியோரின் முகங்களை உடைய லிங்கம் என்று கூறுவர். இத்தகைய திருமூர்த்தி லிங்கம் கோவில் கருவறையில் உள்ள சிறப்பைப் பெற்ற தலம் திருவக்கரை ஆகும்.
