தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்
பற்றிக் கூறும் இணையதளம்

ஆடகேச்சுவரர். திருக்கோவில், ஆடகேச்சுரம்


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்ஆடகேச்சுரம் (திருவாரூர்த் திருக்கோவிலுக்குள் "நாகபிலம்" என வழங்கும் ஆலயம்)
இறைவன் பெயர்ஆடகேச்சுவரர்
இறைவி பெயர்அம்பாள் சந்நிதி இல்லை
பதிகம்அப்பர் (6-71-8)
எப்படிப் போவது திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்குள் உள்ள ஒரு தனிக் கோயில் ஆடகேச்சுரம். திருவாரூர்த் திருக்கோவிலுக்குள் தெற்குப் பிராகாரத்தில் "நாகபிலம்" என வழங்கும் ஆலயமே ஆடகேச்சுரம் என்பர்.
ஆலய முகவரி அருள்மிகு தியாகராஜர் திருக்கோவில்
திருவாரூர்
திருவாரூர் மாவட்டம்
PIN - 610001

ஆடகேச்சுரம் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 71-வது பதிகத்தில் 8-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இப்பதிகம் அப்பர் பெருமான் திருப்பூந்துருத்தியில் தங்கி இருந்த போது "சுரம்" என வருவனவற்றை வகுத்து அருளிச் செய்தது.

நாடகம் ஆடிடம் நந்திகேச்சுரம் மா காளேச்
சுரம் நாகேச்சுரம் நாகளேச்சுரம் நன்கு ஆன
கோடீச்சுரம் கொண்டீச்சுரம் திண்டீச்சுரம்
குக்குடேச்சுரம் அக்கீச்சுரம் கூறுங்கால்
ஆடகேச்சுரம் அகத்தீச்சுரம் அயனீச்சுரம்
அத்தீச்சுரம் சித்தீச்சுரம் அம் தண் கானல்
ஈடு திரை இராமேச்சுரம் என்று என்று ஏத்தி
இறைவன் உறை சுரம் பலவும் இயம்புவோமே.

பொழிப்புரை :
கூத்தப் பெருமானது இடமாகிய நந்திகேச்சுரம், மாகாளேச்சுரம், நாகேச்சுரம், 
நாகளேச்சுரம், நன்மை பொருந்திய கோடீச்சரம், கொண்டீச்சரம், திண்டீச்சரம், 
குக்குடேச்சுரம், அக்கீச்சரம் என்றுமிவற்றைக் கூறுமிடத்து உடன்வரும் 
ஆடகேச்சுரம், அகத்தீச்சுரம், அயனீச்சுரம், அத்தீச்சுரம், சித்தீச்சுரம், அழகிய 
குளிர்ந்த கடற் கரையில் முத்து பவளம் முதலியவற்றைக் கொணர்ந்து போடும் 
திரைகள் சூழ்ந்த இராமேச்சுரம் என்றெல்லாம் இறைவன் தங்குகின்ற 
ஈச்சுரம் பலவற்றையும் கூறி அவனைப் புகழ்வோமாக..