தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்
பற்றிக் கூறும் இணையதளம்

பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில், ஈசனூர்


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்ஈசனூர்
இறைவன் பெயர்பிரம்மபுரீஸ்வரர்
இறைவி பெயர்சுகந்த குந்தளாம்பிகை
பதிகம்சுந்தரர் (7-31-8)
எப்படிப் போவது திருவாய்மூர் என்ற பாடல் பெற்ற சிவஸ்தலத்திலிருந்து வடகிழக்கே சுமார் 2 கி.மீ. தொலைவில் ஈசனூர் உள்ளது. எட்டிக்குடியிலிருந்தும் (முருகன் தலம்) ஈசனூர் செல்ல சாலை வசதி உள்ளது. நாகப்பட்டிணம் - திருத்துறைப்பூண்டி பேருந்து சாலையில் கீழையூரைக் கடந்து மேலை ஈசனூர் என்ற இடத்தில் வலதுபுறம் பிரியும் சாலையில் சுமார் 2 கி.மீ. சென்றும் இத்தலத்தை அடையலாம்.
ஆலய முகவரி அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில்
மேலை ஈசனூர்
கீழையூர் அஞ்சல்
திருக்குவளை வட்டம்
நாகப்பட்டிணம் மாவட்டம்,
PIN - 611103

இவ்வாலயத்தில் தினந்தோறும் ஒரு கால பூஜை தடைபெறுகிறது. ஆலயம் மூடியிருந்தால் அருகில் விசாரித்து திறக்கச் சொல்லி தரிசிக்கலாம்.

ஈசனூர் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

சுந்தரரின் 7-ம் திருமுறையில் 31-வது பதிகத்தில் 8-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.

தேசனூர் வினை தேய நின்றான் திரு ஆக்கூர்
பாசனூர் பர மேட்டி பவித்திர பாவ
நாசனூர் நனிபள்ளி நள்ளாற்றை யமர்ந்த
ஈசனூர் எய்தமான் இடையாறு இடைமருதே.

பொழிப்புரை :		www.thevaaram.org.

ஒளிவடிவினனும், தீவினைகள் குறைய நிற்பவனும், திருவருளாகிய தொடர்பினை உடையவனும், மேலிடத்தில் இருப்பவனும், தூயவனும், பாவத்தைப் போக்குபவனும், நள்ளாறு என்னும் தலத்தை விரும்பி இருக்கின்ற முதல்வனும், யாவராலும் அடையப்படும் பெருமானும் ஆகிய இறைவனது ஊர்கள், தேசனூர், ஆக்கூர், பாசனூர், நாசனூர், நனிபள்ளி, ஈசனூர், இடையாறு, இடைமருது என்னும் இவைகளே 

கோவில் அமைப்பு: நான்கு புறமும் மதிற்சுவருடன் இந்த சிறிய ஆலயம் அkrந்துள்ளது. உள்ளே செல்ல ஒரு இரும்புக் கம்பி கதவை திறந்து கொண்டு செல்ல வேண்டும், உள்ளே திறந்த வேளியில் சுவாமி சந்நிதி, அம்பாள் சந்நிதி, சண்டீஸ்வரர் சந்நிதி மற்றும் பைரவர், சூரியன் சந்நிதிகளைத் தவிர வேறு எதுவுமில்லை.

மூலவர் பிரம்மபுரீஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. உள்ளே கருவறையில் கிழக்கு நோக்கி இறைவன் பிரம்ம்புரீஸ்வரர் காட்சி அளிக்கிறார். சுவாமி சந்நிதிக்கு எதிரே சிறிய மண்டபத்தில் நந்தியெம்பெருமான் உள்ளார். அருகில் பலிபீடமும் உள்ளது. இறைவன் சந்நிதிக்கு வடபுறத்தில் சிறிய மண்டபத்தில் சண்டிகேஸ்வரர் சந்நிதியும் அதையடுத்து கிழக்கு நோக்கிய அம்பாள் சந்நிதியும் அமைந்துள்ளன. ஆலயத்தினுள்ளே வடகிழக்குப் பகுதியில் பைரவரும், சூரியனும் உள்ளனர்.

ஈசனூர் பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்

ஆலயத்தின் முழு தோற்றம்

நந்தி மண்டபம், பலிபீடம்

மூலவர் பிரம்மபுரீஸ்வரர்

இறைவன் சந்நிதி தோற்றம்

பைரவர், சூரியன்

அம்பாள் சுகந்த குந்தளாம்பிகை