தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்
பற்றிக் கூறும் இணையதளம்

நந்திநாதேஸ்வரர் திருக்கோவில், பொய்கைநல்லூர்


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்பொய்கைநல்லூர்
இறைவன் பெயர்நந்திநாதேஸ்வரர்
இறைவி பெயர்செளந்தரநாயகி
பதிகம்அப்பர் (6-70-11)
எப்படிப் போவது நாகப்பட்டிணம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஈச்சங்குப்பம், அக்கரைப்பேட்டை வழியாக வேளாங்கண்ணி செல்லும் சாலையில் பொய்கைநல்லூர் உள்ளது. ஆலயம் வடக்கு பொய்கைநல்லூர் பகுதியில் சாலை ஓரத்திலேயே உள்ளது. அருகில் கோரக்க சித்தர் கோவிலும் உள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு நந்திநாதேஸ்வரர் திருக்கோவில்
வடக்கு பொய்கைநல்லூர்
பொய்யூர் அஞ்சல்
நாகப்பட்டிணம் மாவட்டம்
PIN - 611106

இவ்வாலயம் தினந்தோறும் காலை 9 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திரந்திருக்கும்.

பொய்கைநல்லூர் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 70-வது பதிகத்தில் 11-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.

புலிவலம் புத்தூர் புகலூர் புன்கூர்
புறம்பயம் பூவணம் பொய்கை நல்லூர்
வலிவலம் மாற்பேறு வாய்மூர் வைகல்
வலஞ்சுழி வாஞ்சியம் மருகல் வன்னி
நிலமலி நெய்த்தானத்தோடு எத்தானத்தும்
நிலவு பெருங்கோயில் பல கண்டால் தொண்டீர்
கலிவலி மிக்கோனைக் கால் விரலாற் செற்ற
கயிலாய நாதனையே காணலாமே.

பொழிப்புரை :

புலிவலம், புத்தூர், புகலூர், புன்கூர், புறம்பயம், பூவணம், பொய்கைநல்லூர், வலிவலம், மாற்பேறு, வாய்மூர், வைகல், வலஞ்சுழி, வாஞ்சியம், மருகல், வன்னி, வளமான நிலத்தை உடைய நெய்த்தானம் முதலிய எந்த ஊரிலும் விளங்குகின்ற பெருங் கோயில்கள் பலவற்றைக் கண்டால் , தொண்டர்களே ! செருக்கிய வலிமை மிக்க இராவணனைத் தன் கால் விரலால் நசுக்கிய கயிலாய நாதனை அவ்விடங்களிலெல்லாம் காணலாம் .

பொய்கைநல்லூர் நந்திநாதேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்

ஆலயத்தின் முகப்பு வாயில்

ஆலயத்தின் உட்புறத் தோற்றம்

நந்தி மண்டபம், பலிபீடம்

தெற்கு திசை கோபுரம்

ஆலயத்தின் உள்புறத் தோற்றம்

ஆலயத்தின் உள்புறத் தோற்றம்

முருகர் சந்நிதி

மூலவர் நந்திநாதேஸ்வரர்

அம்பாள் செளந்தரநாயகி