தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்
பற்றிக் கூறும் இணையதளம்

தேவார வைப்புத் தலங்கள் - பட்டியல் - அகர வரிசையில்...

பாடல் பெற்ற சிவஸ்தலங்களுக்கு அடுத்த நிலையில் வைத்துப் போற்றப்படுவை தேவார வைப்புத் தலங்களாகும். வைப்புத் தலம் என்பது தனிப்பதிகம் பெறாது வேற்றூர் பதிகத்தின் இடையிலும், பொது பதிகத்தின் இடையிலும் தலப் பெயர் வரும் தலங்களைக் குறிப்பிடும்.

இந்த வைப்புத் தலங்களின் பெயர், பாடியவர், தலப்பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பதிகம் ஆகியவற்றைப் பற்றிய பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தலப்பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பதிகம் 6-71-8 என்பது ஆறாவது திருமுறையில் 71வது பதிகத்தில் வரும் 8வது பாடல் என்று பொருள்படும்.

பக்கம் 1

காம்பீலி
தேவாரத்தில் தலத்தின் பெயர்பாடியவர்தலப்பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பதிகம்
1அகத்திச்சுரம்அப்பர் 6-71-8
2அசோகந்திஅப்பர் 6-7-10, 6-71-9
3அக்கீச்சுரம்அப்பர் 6-71-8
4அணி அண்ணாமலைஅப்பர்4-63-1, 4-63-4
5அண்ணல்வாயில்அப்பர்6-71-7
6அத்தீச்சுரம்அப்பர்6-71-8
7அத்திசம்பந்தர்2-39-2
8அயனீச்சுரம்அப்பர்6-71-6
9அரிச்சந்திரம்அப்பர்6-51-10
10அளப்பூர்அப்பர், சுந்தரர் 6-51-3, 6-70-4, 6-71-4, 7-47-4
11அறப்பள்ளிசம்பந்தர், அப்பர்2-39-4, 5-34-1, 6-70-1, 6-71-1
12ஆடகேச்சரம்அப்பர்6-71-8
13ஆழியூர்அப்பர், சுந்தரர்6-70-7, 7-12-7
14ஆறைமேற்றளி சுந்தரர்7-35-1
15ஆன்பட்டி (பேரூர்)அப்பர்6-7-10
16இராப்பட்டிச்சரம்அப்பர்6-25-10
17இடைக்குளம்அப்பர்6-71-10
18இடங்கொளூர்அப்பர்7-31-3
19இரும்புதல்அப்பர்6-51-6
20இளையான்குடிசுந்தரர்7-31-1
21ஈசனூர்சுந்தரர்7-31-8
22உஞ்சேனை மாகாளம் உஜ்ஜயனி6-70-8
23உருத்திரகோடிஅப்பர்6-70-8
24ஊற்றத்தூர்அப்பர்6-70-10, 6-71-4
25எழுமூர் அப்பர்6-70-5
26ஏமநல்லூர்அப்பர்6-70-4
27ஏழூர்அப்பர்6-70-5
28ஏமப்பேறூர்அப்பர்6-70-3
29ஏர் (ஏரகரம்)அப்பர்6-51-6, 6-70-3
30கச்சிப்பலதளிஅப்பர்6-70-4
31கச்சிமயானம்அப்பர்6-97-10
32கஞ்சாறுஅப்பர்6-70-8
33கடம்பை இளங்கோவில்அப்பர்6-70-5
34கடையக்குடிஅப்பர்6-71-3
35கண்ணைஅப்பர்6-70-6
36கந்தமாதனம்அப்பர்6-71-9
37கரபுரம்அப்பர்6-7-7
38கருந்திட்டைக்குடிஅப்பர்6-71-3
39கருப்பூர்சுந்தரர்7-98-3
40களந்தைசுந்தரர்7-39-6
41கழுநீர்க்குன்றம்அப்பர்6-13-4
42காட்டூர்சம்பந்தர், சுந்தரர் 2-39-7, 7-47-1
43காம்பீலிஅப்பர்6-70-2
44காரிகரைசுந்தரர்7-31-3
45காறைஅப்பர்6-79-8
46கிள்ளிக்குடிசுந்தரர்7-12-7
47கிழையம்சுந்தரர்7-12-5
48கீழையில்சுந்தரர்7-12-7
49குக்குடேச்சரம்அப்பர்6-71-8
50குகையூர்அப்பர்6-71-8