Shiva Temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


அநேகதங்காபதேஸ்வரர் திருக்கோவில், கச்சி அநேகதங்காபதம்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்கச்சி அநேகதங்காபதம்
இறைவன் பெயர்அநேகதங்காபதேஸ்வரர்
இறைவி பெயர்காமாட்சி அம்மன்
பதிகம்சுந்தரர் - 1
எப்படிப் போவது காஞ்சிபுரம் நகரில் இருந்து வடமேற்கே 3 கி.மீ. தொலைவில் சுற்றுலா மையமான பிரபல கைலாசநாதர் கோவிலுக்குச் செல்லும் வழியில் இந்த சிவஸ்தலம் உள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து நகரப் பேருந்துகள் இருக்கின்றன.
ஆலய முகவரிஅருள்மிகு அநேகதங்காபதேஸ்வரர் திருக்கோவில்
பிள்ளையார்பாளயம்
காஞ்சீபுரம்
காஞ்சீபுரம் மாவட்டம்
PIN - 631501

படிக்கும் நேரம் - நிமிடங்கள்

அநேகதங்காபதம் என்ற பெயரில் இரண்டு பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் இருக்கின்றன. ஒன்று வடநாட்டில் ஹரித்வார் - கேதார்நாத் செல்லும் வழியில் உள்ள கெளரிகுண்டம் சென்று அங்கிருந்து பயணிக்க வேண்டும். மற்றொன்று காஞ்சீபுரத்திலுள்ள இத்தலம். வடநாட்டில் உள்ள அநேகதங்காபதம் சிவஸ்தலத்திலிருந்து வேறுபடுத்திக் காட்ட இத்தலம் கச்சி அநேகதங்காபதம் என்ற பெயரால் வழங்குகிறது.


கோவில் அமைப்பு :இவ்வாலயம் வடக்கில் ஒரு சிறிய கோபுரத்துடன் கூடிய முகப்பு வாயிலுடனும், கிழக்கில் மற்றொரு முகப்பு வாயிலுடனும் காணப்படுகிறது. . இந்த வாயிலகள் வழியே நுழைந்தால் ஒரு விசாலமான வெளிச் சுற்று உள்ளது. கிழக்கு வாயிலின் உள்ளே சென்றவுடன் நாம் நேரே காண்பது பலிபீடம் மற்றும் நந்தி மண்டபம். தெற்கு வெளிப் பிரகாரத்தில் தேவார மூவர் சந்நிதியைக் காணலாம். மேற்கு வெளிப் பிரகாரத்தில் தென்மேற்குப் பகுதியில் விநாயகர் சந்நிதியும், வடமேற்குப் பகுதியில் வள்ளி தெய்வானையுடன் உள்ள ஸ்ரீசுப்பிரமணியர் சந்நிதி ஆகியவற்றைக் காணலாம். மூலவர் வட்டவடிவ ஆவுடையார் மீது பெரிய லிங்கத் திருமேனியுடன் நமக்கு அருட்காட்சி தருகிறார். கோஷட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, விநாயகர், பிரம்மா மற்றும் துர்க்கை உள்ளனர்.



அனேகதம் என்றால் யானை. யானை முகத்தையுடைய விநாயகர் சிவலிங்கத் திருமேனியை நிறுவி வழிபட்ட தலம் ஆதலால் இது அநேகதங்காபதம் என்று பெயர் பெற்றது. குபேரன் வழிபட்ட பெருமையுடையது இத்தலம். அநேகதங்காபதேஸ்வரர் இரணியபுர அசுரரான கேசியை அழித்து கேசியின் மகளான சிவபக்தை வல்லபையை விநாயகருக்கு மணம் முடிக்க வரம் தநத சிறந்த தலமாகும்.

விநாயகப் பெருமானால் வழிபடப்பட்ட அநேகதங்காபதேஸ்வரரை வழிபடுவர்கள் கொடிய துன்பமாகிய பிறவித்துயர் தீர்ந்து இறைவன் உறையும் திருக்கயிலாயத்தை அடைந்து அங்கு தங்கும் பேற்றினைப் பெறுவர் என்று காஞ்சிப் புராணம் கூறுகிறது.

சுந்தரர் பாடிய இத்தலத்திற்கான பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.


சுந்தரர் அருளிய இத்தலத்து பதிகம்

  1. தேனெய் புரிந்துழல் செஞ்சடை யெம்
அநேகதங்காபதேஸ்வரர் ஆலயம்
புகைப்படங்கள்

வடதிசையிலுள்ள சிறிய கோபுரம்
கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி
அநேகதங்காபதேஸ்வரர் சந்நிதி
நந்தி மண்டபம், பினபுறம் பலிபீடம்
கருவறை சுற்றுச் சுவரில் கோஷ்ட மூர்த்தங்கள்