தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள் பற்றிக் கூறும் இணையதளம்

Main menu


இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடலில் கூறப்பட்டுள்ள காரிக்கரை, கடங்களூர், விடங்களூர் ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.


ஆலயத்தின் 3 நிலை இராஜகோபுரம்

இடங்கொண்டீஸ்வரர் சந்நிதி

பிரஹத் சுந்தர குஜாம்பிகை சந்நிதி

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்இடங்கொளூர் (இன்றைய நாளில் கல்யாணபுரம் என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்இடங்கொண்டீஸ்வரர்
இறைவி பெயர்பிரஹத் சுந்தர குஜாம்பிகை
பதிகம்சுந்தரர் (7-31-3)
எப்படிப் போவதுகும்பகோணம் - வேப்பத்தூர் சாலை வழியில் திருவிசநல்லூருக்கு முன்பாகவே கல்யாணபுரம் என்ற ஊர் வரும். இவ்வூரில் சாலை ஓரத்திலேயே இடங்கொண்டீஸ்வரர் ஆலயம் உள்ளது..
ஆலய முகவரிஅருள்மிகு இடங்கொண்டீஸ்வரர் திருக்கோவில்
கல்யாணபுரம்
திருவிசநல்லூர் அருகில்
திருவிடைமருதூர் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 612102

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 முதல் 10 மணி வரையிலும் மாலை 5-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
இடங்கொளூர் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

சுந்தரரின் 7-ம் திருமுறையில் 31-வது பதிகத்தில் 3-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.


கடங்களூர் திருக்காரிகரை கயிலாயம் விடங்களூர் 
திருவெண்ணி அண்ணாமலை வெய்யபடங்கள் ஊர்கின்ற 
பாம்பரையான் பரஞ்சோதிஇடங்கொளூர் ஊர் 
எய்தமான் இடையாறு இடைமருதே.

பொழிப்புரை: 

கொடிய படங்களோடு ஊர்ந்து செல்கின்ற பாம்புகளை அரையில் உடையவனும், மேலான ஒளியாய் 
உள்ளவனும், யாவராலும் அடையப்படுபவனுமாகிய இறைவன் தனக்கு இடமாகக் கொள்ளுகின்ற ஊர்கள், 
செய்கடன்கள் நிரம்ப நிகழ்கின்ற காரிகரை, கயிலாயம், நீரும் தேனும் மிக்குப் பாய்கின்ற வெண்ணி, அண்ணாமலை, 
இடையாறு, இடைமருது என்னும் இவைகளே.

இடங்கொளூர் இடங்கொண்டீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்
கோபுர வாயில் கடந்து உள் தோற்றம் நால்வர், இடும்பன் மற்றும் தட்சன் சுவாமி சந்நிதி நுழைவாயில்
ஆலயத்தின் உள் தோற்றம் ஆலயம் உள்புறத் தோற்றம் நந்திமண்டபம்