தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
| தகவல் பலகை | |
|---|---|
| இறைவன் பெயர் | இராசேந்திர சோழீஸ்வரர் |
| இறைவி பெயர் | ஞானாம்பிகை |
| பதிகம் | சுந்தரர் 7-31-1 |
| எப்படிப் போவது | சிகங்கை மாவட்டத்திலுள்ள பரமக்குடியில் இருந்து மேற்கே சுமார் 10 கி.மீ. தொலைவில் இளையான்குடி தலம் உள்ளது. |
| ஆலய முகவரி | அருள்மிகு இராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோவில் இளையான்குடி இளையான்குடி அஞ்சல் இளையான்முடி வட்டம் சிவகங்கை மாவட்டம் |
சுந்தரரின் 7-ம் திருமுறையில் 39-வது பதிகத்தில் 1-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.
தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற் கடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே
பொழிப்புரை :
தில்லைவாழந்தணர், தொகையடியார்; இம்முதலடி திருவாரூர் இறைவன் எடுத்துக் கொடுத்தருளியதாதலைப்
பெரிய புராணத்தால் அறிக. நாயன்மாரது பெயர்களிற் பெரும்பாலன அவர்களது தொண்டுபற்றி வந்த சிறப்புப்
பெயரே என்க. தில்லைவாழந்தணர், தொகையடியார்; இம்முதலடி திருவாரூர் இறைவன் எடுத்துக்
கொடுத்தருளியதாதலைப் பெரிய புராணத்தால் அறிக. நாயன்மாரது பெயர்களிற் பெரும்பாலன அவர்களது
தொண்டு பற்றி வந்த சிறப்புப் பெயரே என்க.