தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள் பற்றிக் கூறும் இணையதளம்

Main menu


இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடலில் கூறப்பட்டுள்ள கொடுங்கோளூர், செங்குன்றூர், கொங்கணம், குன்றியூர், நியமநல்லூர், எழுமூர், தோழூர், ஏமகூடம் ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்ஏழூர் (இன்றைய நாளில் ஏளூர் என்று அழைக்கப்படுகிறது)
இறைவன் பெயர்தேனீஸ்வரர், கைலாசநாதர்
இறைவி பெயர்தேனுகாம்பிகை
பதிகம்அப்பர் (6-70-5)
எப்படிப் போவதுநாமக்கல் - சேலம் சாலையில் புதன் சந்தை என்ற ஊரைக் கடந்து இடதுபுறம் அகரம் சாலையில் தத்தாத்திரிபுரம், அகரம் ஆகிய ஊர்களைக் தாண்டி 1 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. புதன் சந்தையிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவு. நாமக்கல்லிலிருந்து வடமேற்கே சுமார் 21 கி.மீ. தொலைவிலுள்ள இத்தலத்திற்கு நகரப் பேருந்துகள் செல்கின்றன. அகரம் ஏளூர் என்று கேட்க வேண்டும்
ஆலய முகவரிஅருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில்
ஏளூர்
ஏளூர் அஞ்சல்
வழி புதுசத்திரம்
நாமக்கல் வட்டம்
நாமக்கல் மாவட்டம்
PIN - 637018

இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.
ஏழூர் (ஏளூர்) வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 70-வது பதிகத்தில் 5-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.


கொடுங்கோளூர் அஞ்சைக்களம் செங்குன்றூர்	
கொங்கணம் குன்றியூர் குரக்குக்காவும்
நெடுங்களம் நன்னிலம் நெல்லிக்காவும்
நின்றியூர் நீடூர் நியமநல்லூர் இடும்பாவனம் எழுமூர் 
ஏழூர் தோழூர் எறும்பியூர் ஏர் ஆரும் 
ஏமகூடம் கடம்பை இளங்கோயில் 
தன்னினுள்ளும் கயிலாய நாதனையே காணலாமே.

பொழிப்புரை :

கொடுங்கோளூர், அஞ்சைக்களம், செங்குன்றூர், கொங்கணம், குன்றியூர், குரக்குக்கா, 
நெடுங்களம், நன்னிலம், நெல்லிக்கா, நின்றியூர், நீடூர், நியமநல்லூர், இடும்பாவனம், 
எழுமூர், ஏழூர், தோழூர், எறும்பியூர், அழகிய ஏமகூடம், கடம்பை இளங்கோயில் 
ஆகிய இடங்களில் கயிலாய நாதனைக் காணலாம்.
நாமக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து ஏழூர் இருப்பிடத்தைக் காட்டும் வரைபடம்
Map courtesy by: Google Maps

கொங்கு மண்டலத்தில் பெரும்பாளப்பட்டி, பெருமாகவுண்டன்பட்டி, வண்டிப்பாளையம், வேம்பம்பட்டி, புதுப்பட்டி, கண்ணன்பட்டி, ஏழூர் ஆகிய ஏழு நாடுகளுக்கு இவ்வூர் தலைமை இடமாக இருந்துள்ளது.

மூலவர் பெரிய சிவலிங்கத் திருமேனி. சுமார் 5 அடி உயரத்துடன் சுயம்புலிங்கமாக இத்தலத்தில் இறைவன் எழுந்தருளியுள்ளார். கொங்கு நாட்டு திருத்தலங்களுக்கே உரித்தான கருங்கல் விளக்குத் தூண் (தீபஸ்தம்பம்) இத்தலத்திலும் உண்டு. இங்குள்ள கல் ஸ்தம்பத்தில் நாற்புறமும் சிவலிங்கம், தட்சிணாமூர்த்தி, நந்தி, துர்க்கை ஆகிய உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.