இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடலில் கூறப்பட்டுள்ள திருவேட்டி, அரணநல்லூர்,ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | கரபுரம் (இக்காலத்தில் இத்தலம் திருபாற்கடல் என்ற பெயருடன் விளங்குகிறது) |
| இறைவன் பெயர் | கரபுரீஸ்வரர் |
| இறைவி பெயர் | அபிதகுஜாம்பாள் |
| பதிகம் | அப்பர் (6-7-7) |
| எப்படிப் போவது | சென்னையில் இருந்து வேலூர் செல்லும் நெடுஞ்சாலையில் காவேரிப்பாக்கம் என்ற ஊர் வரும். அங்குள்ள F4 காவல் நிலையத்தின் எதிரே திருப்பாற்கடல் செல்லும் சாலையில் சுமார் 2.5 கி.மீ. சென்றால் திருப்பாற்கடல் கரபுரீஸ்வரர் ஆலயத்தை அடையலாம். |
| ஆலய முகவரி |
அருள்மிகு கரபுரீஸ்வரர் திருக்கோவில் திருப்பாற்கடல் வழி காவேரிப்பாக்கம் வேலூர் மாவட்டம் PIN - 632508 இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் 10 மணி வரையில் திறந்திருக்கும். ஒரு கால பூஜை மட்டும் நடைபெறுகிறது. |
திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 7-வது பதிகத்தில் 7-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.
தெண்ணீர்ப் புனற்கெடில வீரட்டமும் சீர்காழி வல்லந் திருவேட்டியும் உண்ணீரார் ஏடகமும் ஊறல் அம்பர் உறையூர் நறையூர் அரணநல்லூர் விண்ணார் விடையார் விளமர் வெண்ணி மீயச்சூர் வீழிமிழலை மிக்க கண்ணார் நுதலார் கரபுரமும் காபாலியார் அவர் தங் காப்புக்களே. பொழிப்புரை : அதிகை வீரட்டம், சீர்காழி, வல்லம், திருவேட்டி, நீர்வளம் மிக்க ஏடகம், ஊறல், அம்பர், உறையூர், நறையூர், அரணநல்லூர், வானத்திலும் உலவும் காளை வாகனம் உடைய சிவபெருமான் உகக்கும் விளமர், வெண்ணி, மீயச்சூர், வீழிமிழலை, நெற்றிக்கண்ணனாம் சிவபெருமான் விரும்பும் கரபுரம் ஆகியவை மண்டை ஓட்டினை ஏந்தும் அப்பெருமான் உகந்தருளியுள்ள திருத்தலங்களாம்.