இப்பதிப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள உஞ்சை, உஞ்சேனை மாகாளம், வாரணாசி, வெகுளீச்சரம் அகியவையும் வைப்புத் தலங்களாகும்
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | கருமாரி (இன்றைய நாளில் இத்தலத்திற்கு மாரியூர் என்று பெயர்) |
| இறைவன் பெயர் | பூவேந்தியநாதர் |
| இறைவி பெயர் | பவளநிறவல்லி |
| பதிகம் | அப்பர் (6-7-11) |
| எப்படிப் போவது | இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள முதுகளத்தூரில் இருந்து தெற்கே சுமார் 31 கி.மீ. தொலைவில் கடற்கரைத் தலமான மாரியூர் உள்ளது. |
| ஆலய முகவரி |
அருள்மிகு பூவேந்தியநாதர் திருக்கோவில் மாரியூர் முதுகளத்தூர் வட்டம் இராமநாதபுரம் மாவட்டம் PIN - 623703 இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், பாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் திறந்திருக்கும். |
திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 7-வது பதிகத்தில் 11-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.
தேனார் புனற்கெடில வீரட்டமும் திருச்செம்பொன் பள்ளி திருப்பூவணம் வானோர் வணங்கும் மணஞ்சேரியும் மதிலுஞ்சை மாகாளம் வார ணாசி ஏனோர்க ளேத்தும் வெகுளீச்சரம் இலங்கார் பருப்பதத்தோ டேணார் சோலைக் கானார் மயிலார் கருமாரியும் கறைமிடற்றார் தம்முடைய காப்புக் களே. பொழிப்புரை : அதிகை வீரட்டம், செம்பொன்பள்ளி, பூவணம், தேவரும் வணங்கும் மணஞ்சேரி, மதில்களை உடைய உஞ்சை மாகாளம், வாரணாசி மற்றவர்களும் வழிபடும் வெகுளீச்சரம், விளங்கும் சீசைலம், பெருமையையுடைய சோலைகளிலே காட்டில் தங்கக் கூடிய மயில்கள் பொருந்தியிருக்கும் கருமாரி என்பன நீலகண்டப் பெருமானுடைய திருத்தலங்களாம்.

முதுகளத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து மாரியூர் செல்லும் வழி வரைபடம்.
Map courtesy by: Google Maps