தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | களந்தை (இன்றைய நாளில் இத்தலத்திற்கு கோவில் களப்பால் என்று பெயர்) |
| இறைவன் பெயர் | அழகியநாதசாமி |
| இறைவி பெயர் | பிரபாநாயகி |
| பதிகம் | சுந்தரர் (7-39-6) |
| எப்படிப் போவது | திருத்துறைப்பூண்டியில் இருந்து மேற்கே சுமார் 14 கி.மீ. தொலைவில் கோவில் களப்பால் தலம் உள்ளது. |
| ஆலய முகவரி |
அருள்மிகு அழகியநாதசாமி திருக்கோவில் கோவில் களப்பால் மன்னார்குடி வட்டம் திருவாரூர் மாவட்டம் PIN - 614710 இவ்வாலயம் தினந்தோறும் காலை 9 மணி முதல் 10 மணி வரையிலும், பாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் திறந்திருக்கும். |
திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 7-வது பதிகத்தில் 10-வது பாடலிலும், 6-ம் திருமுறையில் 70-வது பதிகத்தில் 9-வது பாடலிலும் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.
வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே
மறவாது கல்லெறிந்த சாக்கியற்கும் அடியேன்
சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்
செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டற் கடியேன்
கார்கொண்ட கொடைக்கழறிற் றறிவாற்கும் அடியேன்
கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்
ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.