தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள் பற்றிக் கூறும் இணையதளம்

Main menu


இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் சுந்தரரின் பதிகப் பாடலில் கூறப்பட்டுள்ள கொழுநல் என்ற தலமும், சம்பந்தரின் இப்பதிகப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள மாட்டூர், மயிண்டீச்சரம் வாதவூர் வாரணாசி, கொடுங்கோவலூர் திருக்குணவாயில் ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்காட்டூர்
இறைவன் பெயர்சுந்தரேஸ்வரர்
இறைவி பெயர்அபிராமி
பதிகம்சுந்தரர் (7-47-1), சம்பந்தர் (2-39-7)
எப்படிப் போவது திருவாரூர் பேருந்து நிலையத்தில் இருந்து வடமேற்கே சுமார் 5 கி.மீ. தொலைவில் காட்டூர் வைப்புத் தலம் உள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோவில்
காட்டூர்
காட்டூர் அஞ்சல்
வழி திருவாரூர்
திருவாரூர் மாவட்டம்
PIN - 610104
காட்டூர் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

சுந்தரரின் 7-ம் திருமுறையில் 47-வது பதிகத்தில் 1-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.


காட்டூர்க் கடலே கடம்பூர் மலையே	
கானப் பேரூராய் கோட்டூர்க் கொழுந்தே 
அழுந்தூர் அரசே
கொழுநல் கொல்லேறே
பாட்டூர் பலரும் பரவப் படுவாய்
பனங்காட்டூரானே
மாட்டூர் அறவா மறவாது உன்னைப்
பாடப் பணியாயே.	 		

பொழிப்புரை:	www.thevaaram.org

காட்டூர், கடம்பூர், கானப்பேர், கேட்டூர், அழுந்தூர், கொழுநல், 
பனங்காட்டூர் முதலிய தலங்களில் எழுந்தருளியிருக்கின்ற இறைவனே 
அடியேன் உன்னை என்றும் மறவாது பாடுமாறு திருவருள்செய்யாய்.
சம்பந்தரின் 2-ம் திருமுறையில் 39-வது பதிகத்தில் 7-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இப்பாடலின் முழுப்பகுதியும் கிடைக்கப் பெறவில்லை.

----------------------
மாட்டூர் மடப் பாச்சிலாச்சிராமம் மயிண்டீச்சரம் வாதவூர் வாரணாசி
காட்டூர் கடம்பூர் படம் பக்கங் கொட்டும் கடலொற்றியூர் 
மற்றுறை யூரவையும்கோட்டூர் திருவாமாத்தூர் கோழம்பமும் கொடுங்கோவலூர் 
திருக்குணவாயில்
********

பொழிப்புரை:	

மாட்டூர், பாச்சிலாச்சிராமம், மயிண்டீச்சரம், வாதவூர் வாரணாசி, காட்டூர் கடம்பூர், 
படம்பக்கம் கொட்டும் கடல் ஒற்றியூர், மற்றுறையூர் அவையும் கோட்டூர், திருவாமாத்தூர், கோழம்பம், 
கொடுங்கோவலூர், திருக்குணவாயில் என்ற தலங்களை இப்பாட்டில் சம்பந்தர் குறிப்பிடுகிறார்.
காட்டூர் இருப்பிடத்தைக் காட்டும் வரைபடம்
Map courtesy by: Google Maps