தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | காம்பீலி |
| இறைவன் பெயர் | விருபாட்சீஸ்வரர் |
| இறைவி பெயர் | கெம்பாம்பாள் |
| பதிகம் | அப்பர் (6-70-2) |
| எப்படிப் போவது | கர்நாடகா மாதிலம், பெல்லாரி மாவட்டத்திலுள்ள ஹோஸ்பேட் (Hospet) பேருந்து நிலையத்திலிருந்து 32 கி.மீ. தொலைவில் காம்பீலி என்கிற இத்தலம் உள்ளது. பெல்லாரியில் இருந்து வடமேற்கே சுமார் 53 கி.மீ.தொலைவு. |
| ஆலய முகவரி |
அருள்மிகு திருக்கோவில் காம்பீலி ஹோஸ்பேட் (Hospet) வழி ஹோஸ்பேட் வட்டம் பெல்லாரி மாவட்டம் கர்னாடகா மாநிலம் PIN - 583132 இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் 11-30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 80 மணி வரையிலும் திறந்திருக்கும். |
திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 70-வது பதிகத்தில் 2-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.
ஆரூர்மூ லட்டானம் ஆனைக் காவும்
ஆக்கூரில் தான்தோன்றி மாடம் ஆவூர்
பேரூர் பிரமபுரம் பேரா வூரும்
பெருந்துறை காம்பீலி பிடவூர் பேணுங்
கூரார் குறுக்கைவீரட்டா னம் முங்
கோட்டூர் குடமூக்குக் கோழம்பமுங்
காரார் கழுக்குன்றுங் கானப்பேருங்
கயிலாய நாதனையே காணலாமே.
பொழிப்புரை :
ஆரூர் மூலட்டானம், ஆனைக்கா, ஆக்கூரில் உள்ள தான் தோன்றி மாடம், ஆவூர், பேரூர்,
பிரமபுரம், பேராவூர், பெருந்துறை, காம்பீலி, பிடவூர், எல்லோரும் விரும்பும் சிறப்பு
மிக்க குறுக்கை வீரட்டம், கோட்டூர், குடமூக்கு, கோழம்பம், மேகங்கள் தங்கும்
கழுக்குன்றம், கானப்பேரூர் இவற்றில் கயிலாய நாதனைக் காணலாம்.