தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள் பற்றிக் கூறும் இணையதளம்

Main menu


இந்த பதிகப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள கடங்களூர், விடங்களூர், இடங்கொளூர் ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்காரிக்கரை (இன்றைய நாளில் ராமகிரி என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்வாலீஸ்வரர்
இறைவி பெயர்மரகதாம்பாள்
பதிகம்சுந்தரர் (7-31-3)
எப்படிப் போவது சென்னையில் இருந்து ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநிலம் நுழைந்து சுருட்டப்பள்ளியை அடுத்து நாகலாபுரம் அடைந்து அங்கிருந்து பிரிந்து செல்லும் சாலையில் சென்று ராமகிரி வாலீஸ்வரர் கோவிலை அடையலாம்.
ஆலய முகவரி அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோவில்
ராமகிரி
ராமகிரி அஞ்சல்
வழி நாகலாபுரம்
சித்தூர் மாவட்டம்
ஆந்திர மாநிலம்
PIN - 517589

இவ்வாலயம் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலையில் 3 மணி முதல் 6 மணி வரையிலும் திறந்திருக்கும்.
காரிக்கரை வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

சுந்தரரின் 7-ம் திருமுறையில் 31-வது பதிகம் 3-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இப்பதிகம் இடையாறு தலத்திற்கான பதிகமாகும்.


கடங்களூர் திருக்காரிகரை கயிலாயம்
விடங்களூர் திருவெண்ணி அண்ணாமலை வெய்ய
படங்கள் ஊர்கின்ற பாம்பரையான் பரஞ்சோதி
இடங்கொளூர் எய்த மான் இடையாறு இடைமருதே.

பொழிப்புரை :

கொடிய படங்களோடு ஊர்ந்து செல்கின்ற பாம்புகளை அரையில் உடையவனும், மேலான 
ஒளியாய் உள்ளவனும், யாவராலும் அடையப்படுபவனுமாகிய இறைவன் தனக்கு இடமாகக் 
கொள்ளுகின்ற ஊர்கள் செய்கடன்கள் நிரம்ப நிகழ்கின்ற காரிகரை, கயிலாயம், 
நீரும் தேனும் மிக்குப் பாய்கின்ற வெண்ணி, அண்ணாமலை, இடையாறு, இடைமருது 
என்னும் இவைகளே.