இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடலில் கூறப்பட்டுள்ள மந்தரமலை, வாரணாசி, விளத்தொட்டி, விராடபுரம், பிரம்பில், கண்ணை ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | காறை |
| இறைவன் பெயர் | கௌதம ஈஸ்வரர் |
| இறைவி பெயர் | கிருபாம்பிகை |
| பதிகம் | அப்பர் (6-70-6) |
| எப்படிப் போவது | இராணிபேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் காறை சிவஸ்தலம் உள்ளது. |
| ஆலய முகவரி |
அருள்மிகு கௌதம ஈஸ்வரர் திருக்கோவில் காறை ராணிபேட்டைஅஞ்சல் ராணிபேட்டை மாவட்டம் PIN - 632404 இவ்வாலயம் காலை மட்டும் ஓரு கால பூஜை நடைபெறுகிறது. |
திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 70-வது பதிகத்தில் 60-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.
மண்ணிப் படிக்கரை வாழ்கொளிபுத்தூர் வக்கரை மந்தாரம் வாரணாசி வெண்ணி விளத்தொட்டி வேள்விக்குடி விளமர் விராடபுரம் வேட்களத்தும் பெண்ணை யருட்டுறைதண் பெண்ணாகடம் பிரம்பில் பெரும்புலியூர் பெருவேளூருங் கண்ணை களர் காறை கழிப்பாலையுங் கயிலாய நாதனையே காணலாமே. பொழிப்புரை : மண்ணிப்படிக்கரை, வாழ்கொளிபுத்தூர், வக்கரை, மந்தாரம், வாரணாசி, வெண்ணி, விளத்தொட்டி, வேள்விக்குடி, விளமர், விராடபுரம், வேட்களம், பெண்ணையாற்றங்கரையிலுள்ள அருட்டுறை, பெண்ணாகடம், பிரம்பில், பெரும்புலியூர், பெருவேளூர், கண்ணை, களர், காறை, கழிப்பாலை முதலிய இடங்களில் கயிலாய நாதனைக் காணலாம்