தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள் பற்றிக் கூறும் இணையதளம்

Main menu


இந்த பதிகப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள திருமலை, ஆழியூர் மற்றும் கீழையில் ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.


killikudi route mapதேவூர் சிவன் கோவிலில் இருந்து கிள்ளிகுடி சிவன் கோவிலுக்கு செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்கிள்ளிக்குடி (கிள்ளுகுடி)
இறைவன் பெயர்அகத்தீஸ்வரர்
இறைவி பெயர்சிவகாமசுந்தரி
பதிகம்சுந்தரர் (7-12-7)
எப்படிப் போவது பாடல் பெற்ற சிவஸ்தலம் கீழ்வேளூரில் இருந்து கச்சனம் செல்லும் பேருந்து சாலையில் தேவூர் கடந்து சற்று தோலைவு சென்றால் கிள்ளிக்குடியை அடையலாம். கிள்ளிக்குடி கிராமத்தில் வழி விசாரித்துக் கொண்டு ஆலயத்தை அடையலாம். கீழ்வேளூரில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவிலும், தேவூரில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவிலும் கிள்ளுகுடி உள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்
கிள்ளிக்குடி
கிள்ளிக்குடி அஞ்சல்
வழி தேவூர்
கீவளூர் வட்டம்
நாகப்பட்டிணம் மாவட்டம்
PIN - 611109

இவ்வாலயம் தற்போது முற்றிலும் சிதிலமடைந்து உள்ளது. திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.
கிள்ளிக்குடி வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

சுந்தரரின் 7-ம் திருமுறையில் 12-வது பதிகம் 7-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.


ஈழநாட்டு மாதோட்டம் தென்னாட்டு இராமேச்சுரம்
சோழ நாட்டுத் துருத்தி நெய்த்தானம் திருமலை
ஆழியூரன நாட்டுக்கெல்லாம் அணியாகிய
கீழையில் அரனார்க்கு இடம் கிள்ளிகுடி யதே.

பொழிப்புரை :

சிவபெருமானாருக்கு உரிய தலங்கள் ஈழநாட்டில் உள்ள மாதோட்டம், தென்னாட்டில் உள்ள 
இராமேச்சுரம், சோழநாட்டிலுள்ள துருத்தி, நெய்த்தானம், திருமலை, ஆழி, கடல் சூழ்ந்த 
நிலவுலகிற் கெல்லாம் அணியாய் விளங்கும் கீழையில், கிள்ளிகுடி என்பவையாகும்.

கிள்ளிக்குடி அகத்தீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்
ஆலயத்தின் தோற்றம்
9-11-2013 எடுக்கப்பட்ட படம்
மூலவர் அகத்தீஸ்வரர் கருவறை விமானம் திருப்பணி