தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள் பற்றிக் கூறும் இணையதளம்

Main menu


இந்த பதிகப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள கீழைவழி, பழையாறு, மிழலை நாட்டிலுள்ள மிழலை, வெண்ணி நாட்டு மிழலை ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்கிழையம் (இன்றைய நாளில் கீழையகம், கீழகரம் என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்ஆதிபுரீஸ்வரர், பிராகிருகேஸ்வரர்
இறைவி பெயர்சௌந்தர்யநாயகி
பதிகம்சுந்தரர் (7-12-5)
எப்படிப் போவது நன்னிலத்தில் இருந்து அச்சுதமங்கலம் செல்லும் சாலை வழியில் நன்னிலத்தில் இருந்து மேற்கே சுமார் 2 கி.மீ. தொலைவிலும், ஶ்ரீவாஞ்சியத்தில் இருந்து வடகிழக்கே சுமார் 3 கி. மீ. தொலைவிலும் கீழையகம் உள்ளது
ஆலய முகவரி அருள்மிகு ஆதிபுரீஸ்வரர் திருக்கோவில்
கீழயகரம், (கீழையகம்)
ஶ்ரீவாஞ்சியம் அஞ்சல்
நன்னிலம் வட்டம்
திருவாரூர் மாவட்டம்
PIN - 610110

இவ்வாலயம் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலையில் 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.
கிழையம் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

சுந்தரரின் 7-ம் திருமுறையில் 12-வது பதிகம் 5-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.


குழலை வென்ற மொழிமட
வாளைஓர் கூறனாம்
மழலை யேற்று மணாளன்
இடம்தட மால்வரைக்
கிழவன் கீழைவழி 
பழையாறு கிழையமும்
மிழலை நாட்டு மிழலை 
வெண்ணி நாட்டு மிழலையே.

பொழிப்புரை :

குழலிசையை வென்ற மொழியினையுடைய உமாதேவியை ஒரு பங்கில் உடையவனாகிய, 
இளமையான இடபத்தையுடைய அழகனும், பெரிய கயிலாய மலைக்கு உரியவனும் ஆகிய 
இறைவனது தலங்கள், கீழைவழி, பழையாறு, கிழையம், மிழலை நாட்டிலுள்ள மிழலை, 
வெண்ணி நாட்டிலுள்ள மிழலை என்பவை
கிழையம் (கிழகரம்) இருப்பிடத்தைக் காட்டும் வரைபடம்
Map courtesy by: Google Maps