தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள் பற்றிக் கூறும் இணையதளம்

Main menu


இந்த பதிகப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள கீழைவழி, பழையாறு, மிழலை நாட்டிலுள்ள மிழலை, வெண்ணி நாட்டு மிழலை ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்கீழையில் (இன்றைய நாளில் கீழையூர் என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்அருணாசலேஸ்வரர், செம்மலைநாதர்
இறைவி பெயர்வண்டமரும் பூங்குழலாள்
பதிகம்சுந்தரர் (7-12-7)
எப்படிப் போவது நாகப்பட்டிணத்தில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் பேருந்து சாலையில் கீழையூர் உள்ளது. கீழையூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சற்று தொலைவிலுள்ள கோவிலுக்கு நடந்தே சென்று வடலாம்.. நாகப்பட்டிணத்தில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் பேருந்துகள் கீழையூர் வழியாகச் செல்கின்றன. திருவாய்மூர் என்ற பாடல் பெற்ற தலத்திலிருந்து வடகிழக்கே 5 கி.மீ. தொலைவில் கீழையில் உள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில்
கீழையூர்
கீழையூர் அஞ்சல்
நாகப்பட்டிணம் மாவட்டம்
PIN - 611103

இவ்வாலயம் காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், மாலையில் 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
கீழையில் (கீழையூர்) வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

சுந்தரரின் 7-ம் திருமுறையில் 12-வது பதிகம் 7-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.


ஈழநாட்டு மாதோட்டம் தென்னாட்டு இராமேச்சுரம்
சோழ நாட்டுத் துருத்தி நெய்த்தானம் திருமலை
ஆழியூரன நாட்டுக்கெல்லாம் அணியாகிய
கீழையில் அரனார்க்கு இடம் கிள்ளிகுடி யதே.

பொழிப்புரை :

சிவபெருமானாருக்கு உரிய தலங்கள் ஈழநாட்டில் உள்ள மாதோட்டம், தென்னாட்டில் உள்ள 
இராமேச்சுரம், சோழநாட்டிலுள்ள துருத்தி, நெய்த்தானம், திருமலை, ஆழி, கடல் சூழ்ந்த 
நிலவுலகிற் கெல்லாம் அணியாய் விளங்கும் கீழையில், கிள்ளிகுடி என்பவையாகும்.
நாகப்பட்டிணத்தில் இருந்து கீழையில் (கீழையூர்) இருப்பிடத்தைக் காட்டும் வரைபடம்
Map courtesy by: Google Maps