இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடலில் கூறப்பட்டுள்ள திண்டீச்சரம், கூந்தலூர், கூழையூர், அசோகந்தி ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.
நாமக்கல்லில் இருந்து மோகனூர் அசலதீபேஸ்வரர் சிவன் கோவிலுக்கு செல்லும் வழி வரைபடம்தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | குமரி கொங்கு (இன்றைய நாளில் மோகனூர் என்று பெயர்) |
| இறைவன் பெயர் | அசலதீபேஸ்வரர், குமரீசுவரர் |
| இறைவி பெயர் | மதுகரவேணி. |
| பதிகம் | அப்பர் (6-70-9) |
| எப்படிப் போவது | நாமக்கல்லில் இருந்து தெற்கே 24 கி.மீ. தொலைவில் மோகனூர் உள்ளது. மோகனூர் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் காவிரியின் வடகரையில் அசலதீபேஸ்வரர் கோவில் உள்ளது. நாமக்கல்லிலிருந்து மோகனூருக்கு அடிக்கடி பேருந்துகள் உள்ளன. |
| ஆலய முகவரி |
அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோவில் மோகனூர் மோகனூர் அஞ்சல் நாமக்கல் வட்டம் நாமக்கல் மாவட்டம் PIN - 637015. இவ்வாலயம் தினந்தோறும் காலை 7-30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5-30 முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். |
திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 70-வது பதிகத்தில் 9-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.
திண்டீச்சரம் சேய்ஞலூர் செம்பொன்பள்ளி (6-70-9) தேவூர் சிரபுரம் சிற்றேமம் சேறை கொண்டீச்சரம் கூந்தலூர் கூழையூர் கூடல் குருகாவூர் வெள்ளடை குமரி கொங்கு அண்டர் தொழும் அதிகைவீரட்டானம் ஐயாறு அசோகந்தி ஆமாத்தூரும் கண்டியூர்வீரட்டம் கருகாவூரும் கயிலாயநாதனையே காணலாமே. பொழிப்புரை : திண்டீச்சரம், சேய்ஞலூர், செம்பொன்பள்ளி, தேவூர், சிரபுரம், சிற்றேமம், சேறை, கொண்டீச்சரம், கூந்தலூர், கூழையூர், கூடல், குருகாவூர் வெள்ளடை, குமரி, கொங்கு, தேவர்கள் தொழும் அதிகை வீரட்டம், ஐயாறு, அசோகந்தி, ஆமாத்தூர், கண்டியூர் வீரட்டம், கருகாவூர் ஆகிய இடங்களில் கயிலாயநாதனைக் காணலாம்