தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள் பற்றிக் கூறும் இணையதளம்

Main menu


சம்பந்தர் பதிகப் பாடலில் உள்ள கூரூர், தென்கோடி, பீடார் ஆகியவையும், அப்பர் பதிகப் பாடலில் உள்ள கொடுங்கோளூர், செங்குன்றூர், கொங்கணம், நியமநல்லூர், எழுமூர், ஏழூர், தோழூர், ஏமகூடம் ஆகியவையும் வைப்புத் தலங்களாகும்

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்குன்றியூர் (இன்றைய நாளில் குன்னியூர் என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்விஸ்வநாதர்
இறைவி பெயர்விசாலாட்சி
பதிகம்சம்பந்தர் (2-39-1), அப்பர் (6-70-5)
எப்படிப் போவது திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலை வழியில் சுமார் 10கி.மீ. தொலைவில் குன்னியூர் உள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோவில்
குன்னியூர்
மாவூர் அஞ்சல்
திருவாரூர் வட்டம்
திருவாரூர் மாவட்டம்
PIN - 610202
குன்றியூர் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

திருஞானசம்பந்தரின் 2-ம் திருமுறையில் 39-வது பதிகத்தில் 1-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.


ஆரூர் தில்லையம்பலம் வல்லம் நல்லம்
  வடகச்சியும் அச்சிறுபாக்கம் நல்ல
கூரூர் குடவாயில் குடந்தை வெண்ணி
  கடல்சூழ் கழிப்பாலை தென்கோடி பீடார்
நீரூர் வயல் நின்றியூர் குன்றியூரும்
  குருகாவையூர் நாரையூர் நீடு  கானப்
பேரூர் நன்னீள் வயல் நெய்த்தானமும்
  பிதற்றாய் பிறைசூடி தன் பேரிடமே.

பொழிப்புரை :

பிறைசூடிய பெருமானின் பெருந்தலங்களாய ஆரூர், தில்லையம்பலம், திருவல்லம், திருநல்லம், 
அச்சிறுபாக்கம், கூரூர், குடவாயில், குடந்தை, வெண்ணி, திருக்கழிப்பாலை, தென்கோடி, பீடார், 
நின்றியூர், குன்றியூர், குருகாவையூர், நாரையூர், கானப்பேரூர், நெய்த்தானம் முதலான 
தலங்களின் பெயர்களைப் பலகாலும் சொல்லிக்கொண்டிரு. உனக்குப் பெரும்பயன் விளையும்.

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 70-வது பதிகத்தில் 5-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.


கொடுங்கோளூர் அஞ்சைக்களம் செங்குன்றூர்
கொங்கணம் குன்றியூர் குரக்குக்காவும்
நெடுங்களம் நன்னிலம் நெல்லிக்காவும்
நின்றியூர் நீடூர் நியமநல்லூர்
இடும்பாவனம் எழுமூர் ஏழூர் தோழூர்
எறும்பியூர் ஏராரும் ஏமகூடம்
கடம்பை இளங்கோயில் தன்னிலுள்ளுங்
கயிலாய நாதனையே காணலாமே

பொழிப்புரை :

கொடுங்கோளூர், அஞ்சைக்களம், செங்குன்றூர், கொங்கணம், குன்றியூர், குரக்குக்கா, நெடுங்களம், 
நன்னிலம், நெல்லிக்கா, நின்றியூர், நீடூர், நியமநல்லூர், இடும்பாவனம், எழுமூர், ஏழூர், தோழூர், 
எறும்பியூர், அழகிய ஏமகூடம், கடம்பை இளங் கோயில் ஆகிய இடங்களில் கயிலாய நாதனைக் காணலாம் 
kundriyur route mapதிருவாரூரில் இருந்து இருந்து குன்றியூர் (குன்னியூர்) சிவன் கோவிலுக்கு செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps