இத்தல பதிகப் பாடலில் குறிப்படப்பட்டுள்ள ஏர்இடவை, ஏமப்பேறூர், தக்களூர், கோத்திட்டை, கோட்டுக்காடு ஆகியவையும் வைப்புத் தலங்களாகும்
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | சடைமுடி (இன்றைய நாளில் திருசென்னம்பூண்டி என்று பெயர்) |
| இறைவன் பெயர் | திவ்யஞானேஸ்வரர், மகாதேவர் |
| இறைவி பெயர் | அகிலாண்டேஸ்வரி |
| பதிகம் | அப்பர் (6-70-3) |
| எப்படிப் போவது | திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து கல்லணை வழியாக திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலை வழியில் கல்லணை கடந்து கோவிலடி வரும். அங்குள்ள பெருமாள் கோவிலில் (திவ்ய தேசம்) இருந்து சுமார் 2.5 கி.மீ. தொலைவில் சடைமுடி (திருசென்னம்பூண்டி) சிவன் கோவில் உள்ளது. |
| ஆலய முகவரி |
அருள்மிகு திவ்யஞானேஸ்வரர் திருக்கோவில் வழி பூண்டி கோவிலடி அஞ்சல் திருவையாறு வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் PIN - 613105 இவ்வாலயம் காலை ஒரு வேளை மட்டும் திறந்திருக்கும். தொல்பொருள் ஆய்வுத்துறை பராமரிப்பில் இக்கோவில் உள்ளது. |
திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 70-வது பதிகத்தில் 3-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.
இடைமருது ஈங்கோய் இராமேச்சரம் இன்னம்பர் ஏரிடவை ஏமப்பேறூர் சடைமுடி சாலைக்குடி தக்களூர் தலையாலங்காடு தலைச்சங் காடு கொடுமுடி குற்றாலம் கொள்ளம்பூதூர் கோத்திட்டை கோட்டாறு கோட்டுக்காடு கடைமுடி கானூர் கடம்பந்துறை கயிலாயநாதனையே காணலாமே. பொழிப்புரை : இடைமருது, ஈங்கோய், இராமேச்சரம், இன்னம்பர், ஏர்இடவை, ஏமப்பேறூர், சடைமுடி, சாலைக்குடி, தக்களூர், தலையாலங்காடு, தலைச்சங்காடு, கொடுமுடி, குற்றாலம், கொள்ளம்பூதூர், கோத்திட்டை, கோட்டாறு, கோட்டுக்காடு, கடைமுடி, கானூர், கடம்பந்துறை ஆகிய இவற்றில் கயிலாய நாதனைக் காணலாம்.
கோவிலடி அப்பக்குடத்தான் பெருமாள் கோவிலில் இருந்து சடைமுடி சிவன் கோவிலுக்கு செல்லும் வழி வரைபடம்