தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள் பற்றிக் கூறும் இணையதளம்

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்சிறப்பள்ளி
இறைவன் பெயர்செவந்தீஸ்வரர்
இறைவி பெயர்சுகந்த குந்தளாம்பிகை
பதிகம்சம்பந்தர் (2-39-4)
எப்படிப் போவது இராசீபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து கிழக்கே நாமகிரிபேட்டை செல்லும் சாலை வழியில் 7 கி.மீ. தொலைவில் சிறப்பள்ளி உள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு செவந்தீஸ்வரர் திருக்கோவில்
சிறப்பள்ளி
இராசீபுரம் வட்டம்
நாமக்கல் மாவட்டம்
PIN - 607108

இவ்வாலயம் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
சிறப்பள்ளி வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

திஞானசம்பந்தரின் 2-ம் திருமுறையில் 39-வது பதிகத்தில் 4-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.


அறப்பள்ளி யகத்தியான் பள்ளிவெள்ளைப் பொடிப்பூசி ஆறணிவானமர் காட்டுப்பள்ளி
சிறப்பள்ளி சிராப்பள்ளி செம்பொன்பள்ளி திருநனிபள்ளி சீர் மகேந்திரத்துப்
பிறப்பில்லவன் பள்ளிவெள் ளச்சடையான் விரும்பும்மிடைப் பள்ளிவண் சக்கரமால்
உறைப்பாலடி போற்றக் கொடுத்தபள்ளி யுணராய்மட நெஞ்சமே யுன்னிநின்றே

பொழிப்புரை :		www.thevaaram.org

நெஞ்சமே! கோயில் எனப்பொருள் தரும் பள்ளி என முடியும் கொல்லி அறைப்பள்ளி, 
அகத்தியான் பள்ளி, காட்டுப்பள்ளி, சிறப்பள்ளி, சிராப்பள்ளி, செம்பொன்பள்ளி, திருநனிபள்ளி 
முதலான தலங்களை உன்னி உணர்வாயாக, உனக்குப் பயன் பல விளையும்.
Siraapalli route mapஇராசீபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பள்ளி சிவன் கோவிலுக்கு செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps