இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடலில் கூறப்பட்டுள்ள பாம்பணி, தஞ்சாக்கை ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | தஞ்சை (இன்றைய நாளில் கீழைத்தஞ்சாவூர் என்று பெயர்) |
| இறைவன் பெயர் | திருமூலநாதர் |
| இறைவி பெயர் | அகிலாண்டேஸ்வரி |
| பதிகம் | சுந்தரர் (7-12-9) |
| எப்படிப் போவது | திருவாரூரில் இருந்து கங்களாஞ்சேரி, திருப்பயத்தங்குடி வழியாக திருமருகல் செல்லும் சாலையில் திருபயத்தங்குடியில் இருந்து கிழக்கே சுமார் 3.5 கி.மீ. தொலைவில் கீழைத்தஞ்சாவூர் இருக்கிறது. |
| ஆலய முகவரி |
அருள்மிகு திருமூலநாதர் திருக்கோவில் கீழைத்தஞ்சாவூர் கீழைத்தஞ்சாவூர் அஞ்சல் வழி திருப்பயத்தங்குடி வட்டம் திருவாரூர் மாவட்டம் PIN - 610101 இவ்வாலயம் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும், |
திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 70-வது பதிகத்தில் 2-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.
தழலு மேனியன் தையல் ஓர் பாகம் அமர்ந்தவன் தொழலும் தொல்வினை தீர்க்கின்ற சோதி சோற்றுத்துறை கழலும் கோவை உடையவன் காதலிக்கும் இடம் பழனம் பாம்பணி பாம்புரம் தஞ்சை தஞ்சாக்கையே. பொழிப்புரை : தழல் போல ஒளிவிடும் திருமேனியை உடையவனும், மங்கையை ஒரு பங்கில் விரும்பி வைத்துள்ளவனும், தன்னைத் தொழுதவுடன் தொழுதவரது பழவினையை அறுக்கின்ற ஒளியாய் உள்ளவனும், கழல் அணிந்த மணிவடத்தை உடையவனும் ஆகிய இறைவன் விரும்புகின்ற தலங்கள் - சோற்றுத்துறை, பழனம், பாம்பணி, பாம்புரம், தஞ்சை, தஞ்சாக்கை என்பவை

திருபயத்தங்குடி பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து கீழைத்தஞ்சாவூர் (தஞ்சை) இருப்பிடத்தைக் காட்டும் வரைபடம்
Map courtesy by: Google Maps
இத்தலம் 63 நாயன்மார்களில் ஒருவரான செருத்துணை நாயனாரின் அவதாரத் தலம். இத்தல இறைவன் திருமூலநாதர் என்றாலும் இப்பகுதி மக்கள் இவ்வாலயத்தை செருத்துணை நாயனார் கோவில் என்றே அழைக்கின்றனர்.