தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள் பற்றிக் கூறும் இணையதளம்

Main menu


இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடலில் (6-71-4) கூறப்பட்டுள்ள பேராவூர், நாலூர், சேற்றூர், ஊற்றத்தூர், அளப்பூர், துவையூர், தோழூர், துடையூர் ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.

புதுச்சேரி விழுப்புரம் சாலை வழியில் தவளக்குப்பம் கடந்து மேற்கே நல்லாற்றூர் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள சிவாலயத்தில் இறைவன் பெயர் பென்னம்பலநாதர். இதையும் தேவார வைப்புதலமான நல்லாற்றூர் என்று கூறுவோரும் உண்டு.

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்நல்லாற்றூர் (இந்நாளில் நல்லாவூர் என்று அழைக்கப்படுகிறது)
இறைவன் பெயர்பசுபதீஸ்வரர்
இறைவி பெயர்சௌந்தரநாயகி
பதிகம்அப்பர் (6-71-4)
எப்படிப் போவது கும்பகோணத்தில் இருந்து திருநீலக்குடி வழியாக எஸ்.புதூர் அடைந்து பின் திருக்கோழம்பம் சென்று அங்கிருந்து கிழக்கே 1.6 கி.மீ. தொலைவிலுள்ள நல்லாவூரை அடையலாம். திருநீலக்குடியில் இருந்து சுமார் 9.5 கி.மீ. தொலைவு.
ஆலய முகவரி அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோவில்
நல்லாவூர்
எஸ்.புதூர் அஞ்சல்
வழி திருக்கோழம்பம்
திருவிடைமருதூர் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 612205

இவ்வாலயத்தில் ஒரு கால பூஜை நடைபெறுகிறது. கோவில் மெய்க்காவலர் வீடு அருகிலுள்ளது. தகவல் தெரிவித்து தரிசனம் செய்யலாம்.
நல்லாற்றூர் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 71-வது பதிகத்தில் 4-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இத்திருத்தாண்டகம் "ஊர்" என முடியும் தலங்களை வகுத்தருளிச் செய்தது


பிறையூரும் சடைமுடி எம் பெருமான் ஆரூர்
பெரும்பற்றப் புலியூரும் பேராவூரும்
நறையூரும் நல்லூரும் நல்லாற்றூரும்
நாலூரும் சேற்றூரும் நாரையூரும்
உறையூரும் ஓத்தூரும் ஊற்றத்தூரும்
அளப்பூர் ஓமாம்புலியூர் ஒற்றியூரும்
துறையூரும் துவையூரும் தோழூர் தானுந்
துடையூரும் தொழ இடர்கள் தொடராவன்றே.

பொழிப்புரை :	www.thevaaram.org

பிறை தவழும் சடைமுடிச் சிவபெருமானுடைய ஆரூர், பெரும் பற்றப்புலியூர், பேராவூர், நறையூர், 
நல்லூர், நல்லாற்றூர், நாலூர், சேற்றூர், நாரையூர், உறையூர், ஓத்தூர், ஊற்றத்தூர், அளப்பூர், 
ஓமாம்புலியூர், ஒற்றியூர், துறையூர், துவையூர், தோழூர், துடையூர், என்னுமிவற்றைத் தொழத் 
துன்பங்கள் தொடர மாட்டா
நீலக்குடி சிவன் கோவிலில் இருந்து நல்லாவூர் (நல்லாற்றூர்) இருப்பிடத்தைக் காட்டும் வரைபடம்
Map courtesy by: Google Maps