இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடல்களில் கூறப்பட்டுள்ள உஞ்சேனை மாகாளம், உருத்திரகோடி, பொதியமலை, தஞ்சை, வழுவூர், மாதானம், வேதீச்சரம், விவீச்சுரம், வெற்றியூர், கஞ்சாறு ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | பஞ்சாக்கை |
| இறைவன் பெயர் | பஞ்சாக்ஷரபுரீசுவரர் |
| இறைவி பெயர் | |
| பதிகம் | அப்பர் (6-70-8) |
| எப்படிப் போவது | மயிலாடுதுறை - ஆக்கூர் முக்கூட்டு சாலை வழியாக பொறையாறு செல்லும் சாலையில் திருக்கடவூருக்கு முன்பாக அம்மனாற்றின் வடகரையில் அன்னப்பன் பேட்டை என்ற இடம் அடைந்து அங்கிருந்து இடது புறமாக சென்று அடையலாம்.. |
| ஆலய முகவரி |
அருள்மிகு பஞ்சாக்ஷரபுரீசுவரர் திருக்கோவில் பஞ்சாக்கை திருக்கடவூர் அஞ்சல் தரங்கம்பாடி வட்டம் மயிலாடுதுறை மாவட்டம் PIN - 609311 வாரத்திற்கு இரண்டு முறை திருக்கடவூர் அர்ச்சகர் வந்து பூஜை செய்து விட்டுப் போகிறார். |
திருநாவக்கரசரின் 6-ம் திருமுறையில் 70-வது பதிகத்தில் 8-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.
உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர் உருத்திரகோடி மறைக்காட்டுள்ளும் மஞ்சார் பொதியின்மலை தஞ்சை வழுவூர் வீரட்டம் மாதானம் கேதாரத்தும் வெஞ்சமாக்கூடல் மீயச்சூர் வைகா வேதீச்சுரம் விவீச்சுரம் வெற்றியூரும் கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக்கையும் கயிலாய நாதனையே காணலாமே. பொழிப்புரை : www.thevaaram.org உஞ்சேனை மாகாளம், ஊறல், ஓத்தூர், உருத்திரகோடி, மறைக்காடு, மேகங்கள் பொருந்திய பொதியமலை, தஞ்சை, வழுவூர்வீரட்டம், மாதானம், கேதாரம், வெஞ்சமாக்கூடல், மீயச்சூர், வைகாவூர், வேதீச்சரம், விவீச்சுரம், வெற்றியூர், கஞ்சனூர், கஞ்சாறு, பஞ்சாக்கை ஆகிய இடங்களில் கயிலாயநாதனைக் காணலாம்
ஆலயம் முற்றிலும் அழிந்து விட்டது. மூலவர் சிவலிங்கத் திருமேனி மட்டும் ஒரு கீற்றுக் கொட்டகையில் வைக்கப்பட்டு பூஜிக்கப்படுகிறது. வேறு மூர்த்தங்கள் ஏதும் இல்லை. தருமை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.