தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள் பற்றிக் கூறும் இணையதளம்

Main menu


இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடலில் கூறப்பட்டுள்ள குத்தங்கூடி, குருத்தங்குடி, அத்தங்குடி, .முதலியன தேவார வைப்புத் தலங்களாகும்.

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்வண்குடி (இந்நாளில்இத்தலம் வெண்குடி என்று அழைக்கபடுகிறது)
இறைவன் பெயர்அகத்தீஸ்வரர்
இறைவி பெயர்காமாட்சி
பதிகம்சம்பந்தர் (2-39-10)
எப்படிப் போவது காஞ்சீபுரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் திம்மயன்பேட்டை கடந்து சிறிது தொலைவு சென்றால் வெண்குடி சிவன் கோவிலை அடையலாம். செங்கல்பட்டில் இருந்து வரும் போது வாலாஜாபாத் தாண்டியவுடன் சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்
வெண்குடி
வாலாஜாபாத் அருகில்
காஞ்சீபுரம் மாவட்டம்
PIN - 631601

இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்
வண்குடி (வெண்குடி) வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

சம்பந்தரின் 2-ம் திருமுறையில் 39-வது பதிகத்தில் 10-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இந்தப் பதிகம் ஷேத்திரக்கோவை என்று கூறப்படும்.


குத்தங்குடி வேதிகுடி புனல்சூழ் குருந்தங்குடி தேவன்குடி மருவும்
அத்தங்குடி தண்டிரு வண்குடியும் அலம்பும் சலம் தன் சடை வைத்து உகந்த
நித்தன் இமலன் உமையோடும் கூட நெடுங்காலம் உறைவிடம் என்று சொல்லாப்
புத்தர் புறம் கூறிய புன் சமணர் நெடும் பொய்களை விட்டு நினைந்து உய்மினே.

பொழிப்புரை :

குத்தங்குடி, வேதிகுடி, குருந்தங்குடி, தேவன்குடி, அத்தங்குடி, வண்குடி முதலான குடி என 
முடியும் தலங்கள் சிவபிரான் உமையம்மையாருடன் கூடி நெடுங்காலம் வீற்றிருப்பன என்று 
எண்ணி வழிபடாப் பௌத்தர் சமணர் கூறும் பொய்மொழிகளை விட்டு அத்தலங்களை நினைந்து 
உய்மின்.
காஞ்சீபுரத்தில் இருந்து வண்குடி (வெண்குடி) இருப்பிடத்தைக் காட்டும் வரைபடம்
Map courtesy by: Google Maps