இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடலில் கூறப்பட்டுள்ள வேளா நாட்டு வேளூர், விளத்தூர் நாட்டு விளத்தூர் ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | வடகஞ்சனூர் |
| இறைவன் பெயர் | இராமலிங்கேஸ்வரர் |
| இறைவி பெயர் | சௌந்தரநாயகி |
| பதிகம் | சுந்தரர் (7-12-8) |
| எப்படிப் போவது | விழுப்புரம் செஞ்சி சாலை வழியில் விழுப்புரத்தில் இருந்து வடக்கே 20 கி.மீ. தொலைவில் கஞ்சனூர் உள்ளது. சென்னையில் இருந்து வருபவர்கள் விழுப்புரத்திற்கு முன்பாகவே விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம் வழியாக வடகஞ்சனூர் சென்று அடையலாம். |
| ஆலய முகவரி |
அருள்மிகு இராமலிங்கேஸ்வரர் திருக்கோவில் கஞ்சனூர் கஞ்சனூர் அஞ்சல் வழி செஞ்சி விழுப்புரம் மாவட்டம் PIN - 605203 |
சுந்தரரின் 7-ம் திருமுறையில் 12-வது பதிகத்தில் 8-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.
நாளும் நன்னிலம் தென்பனையூர் வடகஞ்சனூர் நீள நீள்சடையான் நெல்லிக் காவு நெடுங்களம் காள கண்டன் உறையும் கடைமுடி கண்டியூர் வேளா நாட்டு வேளூர் விளத்தூர் நாட்டு விளத்தூரே. பொழிப்புரை : நன்னிலம், பனையூர், வடகஞ்சனூர், நெல்லிக்கா, நெடுங்களம், கடைமுடி, கண்டியூர், வேளா நாட்டில் உள்ள வேளூர், விளத்தூர் நாட்டிலுள்ள விளத்தூர் என்ற தலங்களில் மிக நீண்ட சடையையுடையவனும், நஞ்சணிந்த கண்டத்தை யுடையவனுமாகிய இறைவன் எந்நாளும் எழுந்தருளியிருப்பார்.

தென் தமிழ்நாட்டில் கஞ்சனூர் என்ற ஓரு பாடல் பெற்ற சிவஸ்தலம் உள்ளது. இத்தலம் நவக்கிரக தலங்களில் சுக்கிரனுக்கு உரிய தலம். இத்தலத்திலிருந்து வேறுபடுத்திக் காட்ட இந்த வைப்புத் தலம் தேவாரம் பாடப் பெற்ற காலத்தில் வடகஞ்சனூர் என்று பெயர் பெற்றிருந்ததது. இந்நாளில் இத்தலமும் கஞ்சனூர் என்றே அழைக்கப்படுகிறது.
இத்தலத்திற்கு மேற்கில் அன்னியூர் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள சிவன் கோவிலில் உள்ள இறைவனின் பெயர் இராமநாதீஸ்வரர். இதுவும் சுந்தரர் வழிபட்ட தலமாக கருதப்படுகிறது.