தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | வரிஞ்சை (இந்நாளில் வரிஞ்சையூர். இரிஞ்சியூர் என்றும் அணக்குடி என்றும் அழைக்கப்படுகிறது) |
| இறைவன் பெயர் | வேதபுரீஸ்வரர் |
| இறைவி பெயர் | வேதநாயகி |
| பதிகம் | சுந்தரர் (7-39-7) |
| எப்படிப் போவது | பாடல் பெற்ற சிவஸ்தலம் தேவூரில் இருந்து தெற்கே சுமார் 3.5 கி.மீ. தொலைவில் இரிஞ்சியூர் அணக்குடி உள்ளது.. |
| ஆலய முகவரி |
அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோவில் இரிஞ்சியூர் (அணக்குடி) வழி தேவூர் கீழ்வேளூர் வட்டம் திருவாரூர் மாவட்டம் PIN - 611109 |
சுந்தரரின் 7-ம் திருமுறையில் 39-வது பதிகத்தில் 7-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.
பொய்யடிமை யில்லாத புலவர்க்கும் அடியேன்
பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழற் கடியேன்
மெய்யடியான் நரசிங்க முனையரையற் கடியேன்
விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தற் கடியேன்
கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்
கழற்சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன்
ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே

பாடல் பெற்ற தலம் தேவூரில் இருந்து வரிஞ்சை இருப்பிடத்தைக் காட்டும் வரைபடம்
Map courtesy by: Google Maps