தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள் பற்றிக் கூறும் இணையதளம்

Main menu


இப்பதிகப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள செம்பங்குடி, நல்லக்குடி, தென்களக்குடி, கருந்திட்டைக்குடி, கடையக்குடி, மாணிகுடி, புற்குடி, மாகுடி, புதுக்குடி ஆகியவையும் வைப்புத் தலங்களாகும்

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்விடைவாய்க்குடி (இந்நாளில் வாக்குடி. வாழ்குடி என்று அழைக்கப்படுகிறது)
இறைவன் பெயர்விஸ்வநாதர்
இறைவி பெயர்விசாலாட்சி
பதிகம்அப்பர் (6-71-3)
எப்படிப் போவது பாடல் பெற்ற சிவஸ்தலம் திருவிற்குடி விரட்டேஸ்வரர் ஆலயத்தில் இருநத்து கிழக்கே சுமார் 1.5 கி.மீ. தொலைவில் வாழ்குடி உள்ளது..
ஆலய முகவரி அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோவில்
வாழ்குடி
வழி திருவிற்குடி
வழி கங்களாஞ்சேரி
நாகப்பட்டிணம் மாவட்டம்
PIN - 610101
விடைவாய்க்குடி வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 70-வது பதிகத்தில் 2-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.


நற்கொடிமேல் விடையுயர்த்த நம்பன் செம்பங்
குடி நல்லக்குடி நளிநாட்டியத்தான் குடி
கற்குடி தென்களக்குடி செங்காட்டங்குடி
கருந்திட்டைக்குடி கடையக்குடி காணுங்கால்
விற்குடி வேள்விக்குடி நல்வேட்டக்குடி
வேதிகுடி மாணிகுடி விடைவாய்க்குடி
புற்குடி மாகுடி தேவன்குடி நீலக்குடி
புதுக்குடியும் போற்ற இடர் போகுமன்றே.

பொழிப்புரை

நல்ல இடபக் கொடியை மேலே உயரத்தூக்கியவனும், நம்புதற்குரியவனுமாகிய சிவபெருமானுடைய 
செம்பங்குடி, நல்லக்குடி, பெருமைமிக்க நாட்டியத்தான்குடி, கற்குடி, இனிய களக்குடி, செங்காட்டங்குடி, 
கருந்திட்டைக்குடி, கடையக்குடி ஆகியவற்றோடு ஆராயுங்கால் குடியில் முடியும் ஊர்களாகிய விற்குடி, 
வேள்விக்குடி, நன்மை மிகு வேட்டக்குடி, வேதிகுடி, மாணிகுடி, விடைவாய்க்குடி, புற்குடி, மாகுடி, 
தேவன்குடி, நீலக்குடி, புதுக்குடி என்பனவற்றையும் புகழ்ந்து கூறத் துன்பம் நீங்கும் .

பாடல் பெற்ற தலம் விற்குடியில் இருந்து விடைவாய்க்குடி செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps