ஆபத்சகாயேஸ்வரர் கோவில், தென்குரங்காடுதுறை
தென்னாடுடைய சிவனே போற்றி| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | தென்குரங்காடுதுறை |
| இறைவன் பெயர் | ஆபத்சகாயேஸ்வரர் |
| இறைவி பெயர் | பவளக்கொடி அம்மை |
| பதிகம் | திருநாவுக்கரசர் - 1 திருஞானசம்பந்தர் - 1 |
| எப்படிப் போவது | கும்பகோணத்தில் இருந்து 12 கி.மி. தொலைவிலும், மயிலாடுதுறையில் இருந்து 20 கி.மி. தொலைவிலும் ஆடுதுறை என்று வழங்கப்படும் இடத்தில் இத்தலம் இருக்கிறது. அருகில் உள்ள ரயில் நிலையம் ஆடுதுறை. இது கும்பகோணம் - மயிலாடுதுறை ரயில் மார்க்கத்தில் இருக்கிறது. கும்பகோணம் - மயிலாடுதுறை சாலை வழியில் உள்ள ஆடுதுறை பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் ½ கி.மி. தொலைவில் ஆலயம் உள்ளது. |
சோழ மன்னன் கண்டராதித்ய சோழனின் மனைவியான செம்பியன் மாதேவியால் கட்டுவிக்கப்பட்ட இந்த ஆலயம் 3 நிலை கோபுரத்துடனும் 2 பிரகாரங்களுடனும் விளங்குகிறது. இராமயணத்தில் வரும் சுக்ரீவன் இத்தலத்தில் இறைவன் அபத்சகாயேஸ்வரரை வழிபட்டுள்ளான் என்று புராண செய்திகள் கூறுகின்றன. வெளிப் பிரகாரத்தில் விஸ்வநாதர், அம்பாள் விசாலாக்ஷி, விநாயகர் மற்றும் முருகன் ஆகியோரின் சந்நிதிகள் அமைந்துள்ளன. அம்பாள் பவளக்கொடி அம்மையின் சந்நிதியும் வெளிப் பிரகாரத்தில் அமைந்துள்ளது. இறைவன் ஆபத்சகாயேஸ்வரரின் சந்நிதி இரண்டாவது உள் பிரகாரத்தில் உள்ளது. மூலவர் குடிகொண்டுள்ள கருவறைச் சுற்றிலும் அகழி போன்ற அமைப்பு இருக்கிறது. கருவறை வெளிப்புறத்தில் உள்சுற்றில் விநாயகர், அகஸ்தியர், பிரம்மா, தட்சினாமூர்த்தி ஆகியோரின் உருவச் சிலைகள் உள்ளன.
சோழ, சேர காலத்திய கல்வெட்டுகள் இக்கோவிலில் காணப்படுகின்றன.