Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

அரசிலிநாதர் கோவில், திருஅரசிலி

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருஅரசிலி ( தற்போது ஒழிந்தியாபட்டு என்று வழங்கப்படுகிறது )
இறைவன் பெயர்அரசிலிநாதர்
இறைவி பெயர்பெரியநாயகி
பதிகம்திருஞானசம்பந்தர்
எப்படிப் போவது பாண்டிச்சேரி - திண்டிவனம் (வழி கிளியனூர்) பேருந்தில் ஒழிந்தியாப்பட்டு கைகாட்டி அருகில் இறங்கி கிழக்கே ஒழிந்தியாப்பட்டு செல்லும் சாலையில் 2.கி.மீ சென்றால் அரசிலி ஆலயத்தை அடையலாம். பாண்டிச்சேரியில் இருந்து சுமார் 17 கி.மி. தொலைவில் ஒழிந்தியாப்பட்டு கைகாட்டி கிளைப் பாதை பிரிகிறது.
திருவக்கரை தலத்தை தரிசித்து விட்டு வருவோர் பிரதான சாலைக்கு வந்து வானூர் வழியாக பாண்டிச்சேரி செல்லும் சாலையில் திருச்சிற்றம்பலம் கூட்டு ரோடு அடைந்து, அங்கிருந்து திண்டிவனம் செல்லும் மார்க்கத்தில் சென்று, மேற்சொல்லியவாறு ஒழிந்தியாப்பட்டு கைகாட்டி உள்ள இடத்தில் வலப்புறமாகப் பிரியும் கிளைப்பாதை வழியே சென்று அரசிலி ஆலயத்தை அடையலாம். மற்றொரு பாடல் பெற்ற தலமான இரும்பை மாகாளம் இங்கிருந்து சுமார் 5 கி.மி. தூரத்தில் இருக்கிறது.
ஆலய முகவரி அருள்மிகு
அரசிலிநாதர் திருக்கோவில்
ஒழிந்தியாப்பட்டு அஞ்சல்
வானூர் வழி
வானூர் வட்டம்
விழுப்புரம் மாவட்டம்

சாளுவ வம்ச மன்னனால் கட்டப்பட்ட கோயில், வாமதேவ முனிவர் வழிபட்டுப் பிரதோஷ நாளில் பேறு பெற்றார். சாளுவ மன்னனும் பிரதோஷ விரதம் இருந்து பெருமானைப் போற்றிப் பேறு பெற்றான். ஆதலின் இத்தலத்தில் பிரேதோஷ வழிபாடு மிகவும் சிறப்புடையதாகும். ராஜகோபுரத்தை அடுத்து உட்புறத்தில் மூலவரை நோக்கியவாறு பைரவர், சூரியன், உருவங்கள் உள்ளன. உள்சுற்றில் விநாயகர் சந்நிதி உள்ளது. கோஷ்டமூர்த்த தட்சிணாமூர்த்தி தனி விமானத்துடன் அழகாக உள்ளார். பிரம்மா, துர்க்கை, வைஷ்ணவி சந்நிதிகள் உள்ளன. ஆறுமுகர் அழகான சந்நிதி. கருவறை வெளிச்சுவரில், ஜயங்கொண்ட சோழ மண்டலத்து கோப்பரகேசரி வர்மன் காலத்தியதாகச் சொல்லப்படும் கல்வெட்டுக்கள் உள்ளன. நால்வரைத்தொழுது பக்க வாயில் வழியே தலப்பதிகக் கல்வெட்டைக் கண்டு ஓதியவாறே உள்சென்று பெருமானை வழிபட வேண்டும். நேரே நடராசசபை. மூலவர் - சிவலிங்கத் திருமேனி - குட்டையானது, ஆவுடையாரும் தாழுவுள்ளது. முன் மண்டபத்தில் வலப்பால் அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது - நின்ற திருக்கோலம். வைகாசி விசாகத்தில் பத்து நாள்களுக்குப் பெரு விழா நடைபெறும்.

திருஅரசிலி அரசிலிநாதர் ஆலய புகைப்படங்கள்


temple gopuram temple kotimaram ambal

திருஅரசிலி ஆலயம் புகைப்படங்கள் அனுப்பிவைத்த சென்னையில் வசிக்கும் திரு பிரபு அவர்களுக்கு எங்களது நன்றி.