A
தகவல்களுக்கு எங்கள் வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்
பரங்கிரிநாதர் கோவில், திருப்பரங்குன்றம்

சிவஸ்தலம் பெயர்: திருப்பரங்குன்றம்

இறைவன் பெயர்: பரங்கிரிநாதர், பரங்குன்றநாதர், சத்தியகிரீஸ்வரர்

இறைவி பெயர்: ஆவுடை நாயகி

பதிகம்: திருஞானசம்பந்தர் - 1, சுந்தரர் - 1

பரங்கிரிநாதர் ஆலயம் புகைப்படங்கள்
எப்படிப் போவது

மதுரையில் இருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் இக்கோவில் இருக்கிறது. மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்தும், சிம்மக்கல் பேருந்து நிறுத்தத்தில் இருந்தும் அடிக்கடி பேருந்துகள் உள்ளது.

பரிகார ஸ்தலம்

வியாபாரத்தில் முன்னேற்றம் காண வழிபடவேண்டிய பரங்கிரிநாதர் கோவில், திருப்பரங்குன்றம்

மேலும் படிக்க.....
ஆலய முகவரி
அருள்மிகு பரங்கிரிநாதர் திருக்கோவில்
திருப்பரங்குன்றம் அஞ்சல்
மதுரை
PIN – 625005
ஆலய நேரம்

காலை: 5:00 – 1:00 PM
மாலை: 4:00 – 8:30 PM

அர்த்த மண்டபம் சிறப்பு நுழைவு கட்டணம் ₹300 செலுத்தி சத்யகிரஸ்வரர், பவளகனிவாய் பெருமாள் தரிசனம் செய்யலாம்
தலப் பெயர் காரணம்

பரம்பொருளான சிவ பெருமான் குன்றம் எனும் மலை வடிவாகக் காட்சியளிக்கும் இடம் திருப்பரங்குன்றம். திரு + பரம் + குன்றம் எனப் பிரிக்கப்படுகிறது.

  • பரம் என்றால் பரம் பொருளான சிவபெருமான்
  • குன்றம் என்றால் குன்று (மலை)
  • திரு என்பது அதன் சிறப்பை உணர்த்தும் அடைமொழி

இக்குன்றமானது சிவலிங்க வடிவிலேயே காணப்படுவதால் சிவபெருமானே குன்றின் உருவில் காட்சியளிப்பதாக எல்லோராலும் வணங்கப்பட்டு வருகிறது. இம்மலையின் உயரம் சுமார் 190 மீட்டராகும்.

திருஞான சம்பந்தர் பாடல்

இம்மலையை நித்தம் வலம் வந்து வழிபட்டால் தொழுவாரின் வினைகளெல்லாம் தீர்ந்துவிடும் என்று திருஞான சம்பந்தர் தான் இயற்றிய தேவாரத்தில் பாடியுள்ளார்.

கோவில் அமைப்பு
குடவரைக் கோவில்

சுமார் 1050 அடி உயரமுள்ள மலை அடிவாரத்தில் வடக்கு திசை நோக்கி அமைந்திருக்கும் இந்த அழகுமிக்க குடைவரைக் கோவில் சிவபெருமானுக்காகவே தோற்றுவிக்கப்பட்டு ஒரு பாடல் பெற்ற தலமாக இருந்தாலும், இத்தலம் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்று என்ற காரணத்தினால் மிகவும் புகழுடன் விளங்குகிறது.

கோபுரம் மற்றும் மண்டபம்

மதுரையில் இருந்து மேற்கே சுமார் 8 கி.மீ தொலைவில் ஒரு சிறிய குன்றின் மீது மலையைக் குடைந்து கட்டப்பட்ட கோவில் இதுவாகும். 150 அடி உயரமுள்ள 7 நிலை இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் அமைந்துள்ளது.

கோபுர வாயில் கடந்தவுடன் உள்ள மண்டபத் தூண் ஒன்றில் தேவேந்திரன் தனது மகள் தெய்வயானையை முருகனுக்குக் கல்யாணம் செய்து கொடுப்பது போன்ற சிற்பம் நம் கருத்தைக் கவரும் வகையில் காட்சி அளிக்கிறது. இம்மண்டபத்திலுள்ள பெரிய நந்தி, அருகில் மயில் மற்றும் மூஞ்சூறு வாகன சிலா உருவங்கள் மிகவும் கண்ணைக் கவரும் நிலையில் இருக்கக் காணலாம்.

கருவறை அமைப்பு

பல படிக்கட்டுகளை ஏறி கோவில் கருவறையை அடையலாம். கருவறை ஒரு குடவரைக் கோவிலாக உள்ளது. இதில் இறைவன் பரங்குன்றநாதர் கிழக்கு நோக்கியும், கற்பக விநாயகர், துர்க்கை, முருகப்பெருமான் வடக்கு நோக்கியும், பவளக்கனிவாய் பெருமாள் மேற்கு நோக்கியும் எழுந்தருளியுள்ளனர்.

சிறப்பு தரிசனம்

பரங்குன்றநாதர் மற்றும் பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோரை தரிசனம் செய்ய வேண்டும் என்றால் சிறப்பு நுழைவுக் கட்டணம் செலுத்தி அதற்கான தனி வழியில் சென்றால் தான் பார்க்க முடியும். மேலும் மற்ற 3 சந்நிதிகளையும் அருகிலிருந்து தரிசிக்க முடியும். இல்லாவிடில் இலவச தரிசனத்தில் சற்று தொலைவிலிருந்து மற்ற 3 சந்நிதிகளான விநாயகர், துர்க்கை, முருகர் ஆகியோரை மட்டுமே பார்க்க இயலும்.

முருகப் பெருமான் திருமணம்

முருகப்பெருமான் அவதாரம் செய்ததன் நோக்கமே சூரபத்மனையும், அவனது சேனைகளையும் அழித்து தேவர்களைக் காப்பதேயாகும். அவ்வண்ணமே முருகப்பெருமான் அவதாரம் செய்து, சூரபத்மனை அழித்து, அவனை மயிலும் சேவலுமாக்கி, மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் ஏற்றுக் கொண்டருளினார்.

இதனால் மகிழ்ச்சியடைந்த தேவர்கள் துயர் களையப் பெற்றார்கள். அதனால் முருகப்பெருமானுக்குத் தன்னுடைய நன்றியைச் செலுத்தும் வகையில் இந்திரன் தன் மகளாகிய தெய்வயானையை திருமணம் செய்து கொடுக்க விரும்பினான்.

திருமண விழா

இதன்படி முருகன் - தெய்வானை திருமணம் இந்த திருப்பரங்குன்றத்தில் நடந்தது. திருமண விழாவில் பிரம்மா விவாக காரியங்கள் நிகழ்த்த, சூரிய, சந்திரர்கள் ரத்ன தீபங்கள் தாங்கி நிற்க, பார்வதி பரமேஸ்வரர் பரமானந்தம் எய்தி நிற்க, இந்திரன் தெய்வயானையைத் தாரை வார்த்து கொடுக்க, முருகப்பெருமான், தெய்வயானையைத் திருமணம் செய்து கொண்டதாகத் திருப்பரங்குன்றப் புராணம் கூறுகிறது.

வழிபாடு சிறப்புகள்
  • பௌர்ணமி அன்று மலையை சுற்றி கிரிவலம் வருவதை மக்கள் வழக்கமாக கொண்டு உள்ளனர்.
  • கார்த்திகை அன்று திருவண்ணாமலை போல் மலை மீது தீபம் ஏற்றப்படுகிறது.
பதிகம் திருப்புகழ்
திருஞானசம்பந்தர் அருளிய இத்தலத்து பதிகம்
  1. நீடலர்சோதி வெண்பிறையோடு நிரைகொன்றை
சுந்தரர் அருளிய இத்தலத்து பதிகம்
  1. கோத்திட்டையுங் கோவலும் கோயில்கொண் டீர்
அருணகிரிநாதர் அருளிய இத்தலத்து திருப்புகழ் - 14 பாடல்கள்
  1. அருக்கு மங்கையர் மலரடி
  2. உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை
  3. கனகந்திரள் கின்றபெ ருங்கிரி
  4. கருவடைந்து பத்துற்ற திங்கள்
  5. கறுக்கும் அஞ்சன விழியிணை
  6. காதட ருங்கயல் கொண்டிசைந் தைம்பொறி
  7. சந்ததம் பந்தத் ...... தொடராலே
  8. சருவும்படி வந்தனன்
  9. தடக்கைப் பங்கயம் கொடைக்குக் கொண்டல்
  10. பதித்தசெஞ் சந்தப் பொற்குட நித்தம்
  11. பொருப்புறுங் கொங்கையர்
  12. மன்றலங் கொந்துமிசை
  13. வடத்தை மிஞ்சிய புளகித வனமுலை
  14. வரைத்தடங் கொங்கை யாலும்
பரங்கிரிநாதர் ஆலயம் புகைப்படங்கள்