A
தகவல்களுக்கு எங்கள் வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்

வர்த்தமானேஸ்வரர் திருக்கோவில், திருப்புகலூர் வர்த்தமானீச்சரம்

சிவஸ்தலம்

திருப்புகலூர் வர்த்தமானீச்சரம்

இறைவன்

வர்த்தமானேஸ்வரர்

இறைவி

கருந்தாழ்குழலி, மனோன்மனி

பதிகம்

திருஞானசம்பந்தர் - 1

எப்படிப் போவது

பாடல் பெற்ற ஸ்தலமான திருப்புகலூர் வர்த்தமானீச்சரம், திருப்புகலூர் அக்னீஸ்வரர் ஆலயத்தின் உள்ளேயே கோணப்பிரான் சந்நிதிக்கு அருகில் அமைந்துள்ளது. இத்தலம் நன்னிலத்தில் இருந்து சுமார் 10 கி.மீ., மயிலாடுதுறையில் இருந்து 33 கி.மீ., காரைக்காலில் இருந்து 20 கி.மீ., மற்றும் திருவாரூரில் இருந்து 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

ஆலய முகவரி

அருள்மிகு வர்த்தமானேஸ்வரர் திருக்கோவில்
திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் தேவஸ்தானம்
திருப்புகலூர் அஞ்சல்
வழி திருக்கண்ணபுரம்
நாகப்பட்டிணம் வட்டம்
நாகப்பட்டிணம் மாவட்டம்
PIN - 609704

ஆலய நேரம்

காலை :  6:00 - 12:00

மாலை :  4:30 - 9:00

அருகில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலம்
வரைபடம் – வர்த்தமானேஸ்வரர் திருக்கோவில், திருப்புகலூர் வர்த்தமானீச்சரம்
ஆலய அமைவும் சந்நிதி விவரமும்

மயிலாடுதுறையிலிருந்து 33 கி.மீ.தூரத்திலும், காரைக்காலில் இருந்து 20 கி.மீ.,தூரத்திலும், திருவாரூரிலிருந்து 18 கி.மீ.,தூரத்திலும், நன்னிலத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவிலும் உள்ள திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோயிலுக்குள்ளேயே திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் என்ற மற்றொரு பாடல் பெற்ற தலம் உள்ளது. மூலவர் அக்னீஸ்வரர் சந்நிதிக்கு வலப்புறம் அமைந்த இத்தலத்தில் இறைவன் வர்த்தமானேஸ்வரர் என்ற பெயருடன் எழுந்தருளியுள்ளார். சந்நிதிக்குள் நுழைந்ததும் இடதுபுறம் முருக நாயனார் சந்நிதியைக் காணலாம். வர்த்தமானேஸ்வரரை சம்பந்தர் மட்டுமே பாடியுள்ளார்; அவரின் பதிகக் கல்வெட்டு சந்நிதியில் உள்ளது. வர்த்தமானேஸ்வரர் சிவலிங்கத் திருமேனி அழகான மூர்த்தி. அம்பாள் மனோன்மணி சிறிய அழகான சந்நிதியில் எழுந்தருளியுள்ளாள். இறைவனையும் அம்பாள் மனோன்மணியையும் தெளிவாகத் தரிசிக்க இயலாதவாறு இரு சந்நிதிகளும் இருட்டடித்துக் காணப்படுகின்றன; ஆலய நிர்வாகிகள் தகுந்த ஏற்பாடு செய்து விளக்குகள் பொருத்தினால் நன்றாக இருக்கும்.

தலத்தின் சிறப்பு
சம்பந்தர் மட்டுமே பாடிய பதிகம்

திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோவில் தலத்தை திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரும் பதிகம் பாடி இருந்தாலும், அதே ஆலயத்திற்குள் உள்ள திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் தலத்தை திருஞானசம்பந்தர் மட்டுமே பதிகம் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பாடிய பதிகம் 2-ம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது.

முருக நாயனாரின் தொண்டு

பதிகத்தின் 3-வது மற்றும் 5-வது பாடல்களில் 63 நாயன்மார்களில் ஒருவரான முருக நாயனாரை சிறப்பித்துப் பாடியுள்ளார். முருக நாயனார் இத்திருத்தலத்தில் அவதரித்து அருள்மிகு வர்த்தமானேஸ்வரருக்குப் புஷ்பத் தொண்டு புரிந்து வந்ததை சம்பந்தர் தனது பதிகத்தின் 5-வது பாடலில் குறிப்பிடுகிறார்.

ஈசன் ஏறமர் கடவுள் இன்னமும் எந்தை யெம்பெருமான்
பூசு மாசில் வெண்ணீற்றர் பொலிவுடைப் பூம்புகலூரில்
மூசு வண்டறை கொன்றை முருகன் முப்போதும் செய் முடிமேல்
வாச மாமலர் உடையார் வர்த்தமானீச்சரத்தாரே.
பொழிப்புரை

அழகிய புகலூரில் முருக நாயனார் வண்டுகள் மொய்க்கும் கொன்றை மலர் கொண்டு மூன்று பொழுதிலும் வழிபட, அந்த மலர்களோடு விளங்கும் வர்த்தமானீச்சரத்து இறைவர் எல்லோர்க்கும் தலைவர், விடையேறு உடையவர், இனிய அமுதம் போன்றவர், எந்தை, எம்பெருமான், குற்றமற்ற வெண்ணீறு பூசியவர்.

பதிகம்
திருஞானசம்பந்தர்
  1. பட்டம் பால்நிற மதியம்