Shiva temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
பாடல் பெற்ற தலம் கோவில் விபரங்கள் தமிழ்நாடு வர ஆலோசனைகள்

இமயம் முதல் குமரி வரை பரந்து விரிந்துள்ள இந்த புனிதமான பாரத நாட்டில் உள்ள தமிழ்நாட்டில் எத்தனை எத்தனையோ சிவாலயங்களும், விஷ்ணு ஆலயங்களும் உள்ளன. 108 திருப்பதிகள் அல்லது 108 வைஷ்ணவ திவ்ய தேசங்கள் எண்று போற்றப்படும் விஷ்ணு ஆலயங்களில் 84 ஆலயங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது. அதே போன்று இந்தியாவில் பல சிவன் கோவில்கள் இருந்தாலும், குறிப்பாக பாடல் பெற்ற சிவஸ்தலம் என்று போற்றப்படும் 274 ஆலயங்களில் 266 கோவில்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. இந்த கோவில்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பும், தொன்மையும், பெருமையும் உள்ளவை.

மஹாபாரதத்தில் வேதவியாசர் அர்ஜுனனை பார்த்து "எவன் ஒருவன் வைகறைத் துயிலெழுந்து மனத்தூய்மையோடு ருத்ர ஜபம் செய்கின்றானோ அவன் இவ்வுலகில் அடைய முடியாத ஐஸ்வர்யம் எண்று எதுவும் இல்லை" என்று சொல்கிறார்.

கலியுகத்தில் பிறவி எடுத்தோர் உய்யும் மார்க்கத்தைப் பெறுவதற்குத் துனையாக இருப்பது சிவ மந்திரம், சிவ தரிசனம், சிவ வழிபாடு முதலியனவாகும். இவை மூன்றும் வாழ்வில் இன்றியமையாதவை. சிவமே எல்லா உலகங்களுக்கும், எல்லா உயிர்களுக்கும் முதலானவன். எல்லாம் சிவமயம்! எங்கும் சிவமயம்! எதிலும் சிவமயம்!

ஆம். நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை தினமும் ஜபித்து வந்தாலே வாழ்வில் எல்லா கஷ்டங்களும் நீங்கிவிடும். சிவன் கோவிலுக்கு சிறிதளவு பணி செய்தாலும் மகத்தான பலன் கிடைக்கும். சிவலிங்கத்திற்கு வலை கட்டி பாதுகாத்த சிலந்தி மறு பிறவியில் கோட்செங்கட் சோழனாகப் பிறந்து தமிழகத்தில் பல மாடக்கோவில்களைக் கட்டி சிவன் திருப்பணி செய்து புகழ் பெற்றான். சிவன் கோவில் விளக்கு எரிய திரியை தூண்டி விட்ட எலி மறு பிறவியில் சிவன் அருளால் மகாபலி சக்ரவர்த்தியாகப் பிறந்தான். சிவ நாமத்திற்கு அப்படியொரு மகிமை. சிவசிவ என்று தினமும் மனதால் நினைத்து உச்சரித்தாலே போதும். பாவங்கள் நீங்கும். மனம் தூய்மை அடையும்.

அடியார்கள் போற்றும் அம்பலத்தரசன் அமர்ந்திருக்கும் தேவாரப் பாடல் பெற்ற 274 சிவஸ்தலங்களில் தமிநாட்டில் உள்ள 266 தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்களைப் பற்றிய வலைத்தளம் இது. இந்த 266 கோயில்களும் தமிழ்நாட்டில் எங்கெங்கு உள்ளன, அங்கு எப்படி செல்வது, அவற்றின் சிறப்புகள் யாவை என்பது பற்றிய ஓர் சிறிய கண்ணோட்டம் தான் இந்த முயற்சி.

இணைய தளத்தைப் பற்றி

திணமணி தமிழ் நாளிதழின் இணைய தளமான www.dinamani.com பதிப்பில் தொடர்ந்து சுமார் 2 வருடங்களுக்கும் மேலாக வெளிவந்த என்னுடைய பரிகாரத் தலங்கள் என்ற கட்டுரைகளின் தொகுப்பாக Pinnalce Books என்ற பதிப்பகத்தார் 2 புத்தகங்களை அச்சிட்டு வெளியிட்டுள்ளனர். ஒவ்வொரு புத்தகத்திலும் 54 ஆலயங்களைப் பற்றியும், அவ்வாலயங்களின் பரிகார சிறப்புகளைப் பற்றியும் தெளிவாக கூறப்பட்டுள்ளன. ஒவ்வொரு புத்தகமும் Rs.200/- விலையில் பதிப்பகத்தாரிடம் கிடைக்கும்.

.
site logo

Ohm Namasivaya

புதியதாக வடிவமைக்கப்பட இந்த இணையதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இந்த இணையதளம் www.shivatemples.com தனது 17 ஆண்டினை நிறைவு செய்துள்ளது. இதுநாள் வரை இந்த இணையதளத்தைப் பார்வையிட்டு ஊக்கப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. மூன்றாவது ஆண்டு துவக்கத்தில் இந்த இணையதளத்தின் தமிழ் பதிப்பு வெளியிடப்பட்டது. ஆங்கிலப் பதிப்பை விட தமிழ் பதிப்பில் அதிக செய்திகள், அதிக விபரங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன. தமிழ் பதிப்பை பார்வையிட்டு உங்கள் கருத்துக்களைக் கூறுமாறு கோருகிறோம்.