சிவஸ்தலம் இருப்பிடம் | இறைவன் பெயர் | |
---|---|---|
1 | சிதம்பரம் | நடராஜர் |
2 | திருவேட்களம் | பாசுபதேஸ்வரர் |
3 | திருநெல்வாயல் | உச்சிநாதேசுவரர் |
4 | திருக்கழிப்பாலை | பால்வண்ண நாதர் |
5 | திருநல்லுர் பெருமணம் | சிவலோக தியாகேசர் |
6 | திருமயேந்திரப்பள்ளி | திருமேனிஅழகர் |
7 | தென்திருமுல்லைவாயில் | முல்லைவன நாதர் |
8 | திருக்கலிக்காமூர் | சுந்தரேஸ்வரர் |
9 | திருசாய்க்காடு (சாயாவனம்) | சாயாவனேஸ்வரர் |
10 | திருபல்லவனீச்சுரம் | பல்லவனேஸ்வரர் |
11 | திருவெண்காடு | சுவேதஆரன்யேஸ்வரர் |
12 | கீழை திருக்காட்டுப்பள்ளி | ஆரண்ய சுந்தரேஸ்வரர் |
13 | திருக்குருகாவூர் வெள்ளடை | வெள்ளடையீசுவரர் |
14 | சீர்காழி | பிரம்மபுரீசர் |
15 | திருகோலக்கா | சத்தபுரீசுவரர் |
16 | திருபுள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன் கோவில்) | வைத்தியநாதர் |
17 | திருக்கண்ணார்கோவில் ( குறுமானக்குடி ) | கண்ணாயிரநாதர் |
18 | திருக்கடைமுடி | கடைமுடிநாதர் |
19 | திருநின்றியூர் | மகாலட்சுமி நாதர் |
20 | திருபுன்கூர் | சிவலோகநாதர் |
21 | நீடூர் | அருட்சோம நாதேஸ்வரர் |
22 | திருஅன்னியூர் | ஆபத்சகாயேஸ்வரர் |
23 | திருவேள்விக்குடி | கல்யாணசுந்தரர் |
24 | திருஎதிர்கொள்பாடி | ஐராவதேஸ்வரர் |
25 | திருமணஞ்சேரி | அருள்வள்ள நாதர் |
26 | திருக்குருக்கை | வீரட்டேஸ்வரர் |
27 | திருக்கருப்பறியலூர் | குற்றம் பொருத்த நாதர் |
28 | திருக்குரக்குக்கா | கோந்தல நாதர் |
29 | திருவாளொளிப்புத்தூர் | மாணிக்கவண்ணர் |
30 | திருமண்ணிப்படிக்கரை | நீலகண்டேசர் |
31 | திருஓமாம்புலியூர் | துயரந்தீர்த்தநாதர் |
32 | திருக்கானாட்டுமுல்லூர் | பதஞ்சலி நாதர் |
33 | திருநாரையூர் | சௌந்தரேசுவரர் |
34 | திருக்கடம்பூர் | அமிர்தகடேசர் |
35 | திருபந்தனைநல்லூர் | பசுபதி நாதர் |
36 | திருகஞ்சனூர் | அக்னீஸ்வரர் |
37 | திருகோடிக்கா | திருக்கோடீஸ்வரர் |
38 | திருமங்கலக்குடி | பிராண நாதேஸ்வரர் |
39 | திருப்பனந்தாள் | தாலவனேஸ்வரர் |
40 | திருஆப்பாடி | பாலுகந்த ஈஸ்வரர் |
41 | திருசேய்ஞலூர் | சத்யகிரீஸ்வரர் |
42 | திருந்துதேவன்குடி ( நண்டாங்கோவில் ) | கற்கடேஸ்வரர் |
43 | திருவியலூர் | சிவயோகிநாத சுவாமி |
44 | திருக்கொட்டையூர் | கோடீஸ்வரர் |
45 | திருஇன்னாம்பர் | எழுத்தறிநாதர் |
46 | திருப்புறம்பியம் | சாட்சி நாதேஸ்வரர் |
47 | திருவிசயமங்கை | விஜயநாதர் |
48 | திருவைகாவூர் | வில்வவனநாதர் |
49 | வடகுரங்காடுதுறை | தயாநிதீஸ்வரர் |
50 | திருப்பழனம் | ஆபத்சகாயநாதர் |
51 | திருவையாறு | பஞ்சநதீஸ்வரர் |
52 | திருநெய்த்தானம் | நெய்யாடியப்பர் |
53 | திருப்பெரும்புலியூர் | வியாக்ர புரீசர் |
54 | திருமழபாடி | வஜ்ரதம்ப நாதர் |
55 | திருப்பழுவூர் | ஆலந்துறையார் |
56 | திருக்கானூர் | செம்மேனி நாதர் |
57 | திருஅன்பில் ஆலாந்துறை | சத்யவாகீஸ்வரர் |
58 | திருமாந்துறை | ஆம்பிரவன நாதர் |
59 | திருபாற்றுறை | ஆதிமூலநாதர் |
60 | திருவானைக்கா | ஜம்புகேஸ்வரர் |
61 | திருபைஞ்ஜிலி | ஞீலிவனேஸ்வரர் |
62 | திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி) | மாற்றுறை வரதீஸ்வரர் |
63 | திருஈங்கோய்மலை | மரகதாசலேசுவரர் |
தமிழ்நாட்டின் இன்றைய கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்கள் நாயன்மார்களால் தேவாரப் பாடல்கள் பாடப்பட்ட காலத்தில் காவிரி வடகரைத் தலங்கள் என்று குறிப்பிடப்பட்டது.
நடு நாட்டிலுள்ள சில சிவ ஸ்தலங்கள் கடலூர் மாவட்டத்தில் உள்ளன. அவைகளை நடு நாட்டிலுள்ள சிவ ஸ்தலங்கள் பட்டியலில் பார்க்க.
இத்தலங்கள் யாவும் தமிழ்நாட்டிலுள்ள கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி முதலிய மாவட்டங்களில் அமைந்துள்ளன.
மாவட்ட வாரியாக இத்தலங்கள் அமைந்துள்ள விபரம் கீழே காண்க.
கடலூர் மாவட்டம் - (8)
சிதம்பரம், திருவேட்களம், திருநெல்வாயல், திருக்கழிப்பாலை, திருஓமாம்புலியூர், திருக்கானாட்டுமுல்லூர், திருநாரையூர், திருக்கடம்பூர்
மயிலாடுதுறை மாவட்டம் - (26)
திருநல்லுர் பெருமணம், திருமயேந்திரப்பள்ளி, தென்திருமுல்லைவாயில், திருக்கலிக்காமூர், திருசாய்க்காடு, திருபல்லவனீச்சுரம், திருவெண்காடு, கீழை திருக்காட்டுப்பள்ளி, திருக்குருகாவூர் வெள்ளடை, சீர்காழி, திருகோலக்கா, திருபுள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன் கோவில்), திருக்கண்ணார்கோவில், திருக்கடைமுடி, திருநின்றியூர், திருபுன்கூர், நீடூர், திருஅன்னியூர், திருவேள்விக்குடி, திருஎதிர்கொள்பாடி, திருமணஞ்சேரி, திருக்குருக்கை, திருக்கருப்பறியலூர், திருக்குரக்குக்கா, திருவாளொளிப்புத்தூர், திருமண்ணிப்படிக்கரை
தஞ்சாவூர் மாவட்டம் - (20)
திருபந்தனைநல்லூர், திருகஞ்சனூர், திருகோடிக்கா, திருமங்கலக்குடி, திருப்பனந்தாள், திருஆப்பாடி, திருசேய்ஞலூர், திருந்துதேவன்குடி, திருவியலூர், திருக்கொட்டையூர், திருஇன்னாம்பர், திருப்புறம்பியம், திருவிசயமங்கை, திருவைகாவூர், வடகுரங்காடுதுறை, திருப்பழனம், திருவையாறு, திருநெய்த்தானம், திருப்பெரும்புலியூர், திருக்கானூர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் - (7)
திருஅன்பில் ஆலாந்துறை, திருமாந்துறை, திருபாற்றுறை, திருவானைக்கா, திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி), திருபைஞ்ஜிலி, திருஈங்கோய்மலை