A
தகவல்களுக்கு எங்கள் வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்
கிருபாபுரீஸ்வரர் திருக்கோவில், திருவெண்ணைநல்லூர்

சிவஸ்தலம் பெயர்: திருவெண்ணைநல்லூர்

இறைவன் பெயர்: கிருபாபுரீஸ்வரர், தடுத்து ஆட்கொண்ட நாதர், வேணுபுரீஸ்வரர்

இறைவி பெயர்: வேற்கண்ணி அம்மை, மங்களாம்பிகை

பதிகம்: சுந்தரர் - 1

கிருபாபுரீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்
எப்படிப் போவது

மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலமான திருக்கோவிலூரில் இருந்து தென்கிழக்கே சுமார் 20 கி.மி. தொலைவிலும், விழுப்புரத்திலிருந்து 22 கி.மீ. தொலைவிலும் பெண்ணையாற்றின் தென்கரையில் திருவெண்ணைநல்லூர் தலம் அமைந்துள்ளது. திருக்கோவிலூரில் இருந்து அரசூர் செல்லும் சாலையில் சென்று இத்தலத்தை அடையலாம். விழுப்புரம், உளுந்தூர்பேட்டை மற்றும் திருக்கோவிலூரில் இருந்து இங்கு வர நேரடிப் பேருந்துகள் உள்ளன.

கோவில் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம்: கடைத்தெரு. விழுப்புரத்தில் இருந்து 135 எண் கொண்ட பேருந்து திருவெண்ணெய் நல்லூர் செல்கிறது. திருக்கோவிலூரில் இருந்து மட்டுமே அதிகமான பேருந்துகள் இயக்கபடுகிறது. பேருந்து நிறுத்தத்தில் இருந்து 350 மீட்டர் தொலைவில் கோவில் அமைந்துள்ளது.

அருகில் உள்ள தலங்கள்
ஆலய முகவரி
அருள்மிகு கிருபாபுரீஸ்வரர் திருக்கோவில்
திருவெண்ணைநல்லூர் அஞ்சல்
திருக்கோயிலூர் வட்டம்
விழுப்புரம் மாவட்டம்
PIN - 607203
ஆலய நேரம்

காலை: 6:00 - 12:00
மாலை: 4:00 - 8:00

வரைபடம் – கிருபாபுரீஸ்வரர் கோவில், திருவெண்ணைநல்லூர்
கோவில் அமைப்பு
வழக்கு தீர்த்த மண்டபம்

இவ்வாலயம் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு இராஜகோபுரத்துடனும் இரண்டு பிராகாரங்களுடனும் அமைந்துள்ளது. கோபுரம் கடந்து உள்ளே நுழைந்தால் சுந்தரர் வழக்கு நடந்த வழக்கு தீர்த்த மண்டபம் உள்ளது. அடுத்து செப்புக் கவசமிட்ட கொடிமரம், கொடிமர விநாயகர், பலிபீடம் ஆகியவை உள்ளன.

விமானக் கோயில் மற்றும் சுந்தரர் சந்நிதி

நேரே உயரத்தில், மேலே, சுந்தரருக்கு இறைவன் ரிஷபாரூடராகக் காட்சி தந்த விமானக் கோயில் உள்ளது. அதற்கு எதிரில் கீழே சுந்தரர் சந்நிதி உள்ளதையும் காணலாம். இவ்வுருவத்தில் சுந்தரர் கையில் ஓலையுடன் காட்சியளிக்கிறார். இத்தல மூலவர் சுயம்பு லிங்கமாக கிருபாபுரீஸ்வரர் என்ற பெயருடன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். அம்மன் மங்களாம்பிகை சந்நிதியும் கிழக்கு நோக்கியே உள்ளது.

உட்பிராகாரம்

கோவிலின் தென்புறம் தண்டதீர்த்தம் உள்ளது. உட்பிராபாரத்தில் பொள்ளாப் பிள்ளையார், முருகன், சுந்தரர் சந்நிதிகள் உள்ளன.

கோஷ்ட மூர்த்தங்கள்

கோஷ்ட மூர்த்தங்களாகப் பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், மகாவிஷ்ணு, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. வெளிச்சுற்றில் அறுபத்துமூவர் திருமேனிகளையடுத்து வரிசையாக சப்தமாதர்களும், சம்பந்தர், மகாவிஷ்ணு, அருணந்திசிவம், மெய்கண்டதேவர் திருமேனிகளும் உள்ளன.

தூண்களில் சிற்பங்கள்

உட்புறத் தூண்களில் பைரவர், தட்சிணாமூர்த்தி சிற்பங்கள் உள்ளன.

கோவில் சிறப்பு
தல வரலாறு - வெண்ணெய்நல்லூர்

இளைவன் நஞ்சுண்ட காலத்தில் அந்நஞ்சு அவரை துன்புறுத்தாமலிருக்க உமையம்மை இத்தலத்தில் பசு வெண்ணெயால் கோட்டை கட்டி அதில் பஞ்சாக்கினி வளர்த்து அதன் நடுவிலிருந்து தவம் செய்த காரணத்தால் இத்தலம் வெண்ணெய்நல்லூர் எனப் பெயர் பெற்றதெனத் தலபுராணம் கூறுகிறது.

தடுத்து ஆட்கொண்ட நாதர்

இறைவன் சிவபெருமான் சுந்தரரை தடுத்தாட்கொண்ட சிறப்புடையது இத்தலம். இறைவன் முதிய வேதியராய் வந்து வழக்குரைத்து சுந்தரர் தனக்கு அடிமை என்று நிரூபித்து தன்னுடன் அழைத்துச் சென்று அவரை ஆட்கொண்டார். இறைவன் அடியெடுத்துத் தர சுந்தரர் பித்தா பிறைசூடி பெருமானே என்ற திருப்பதிகத்தை அருளிய தலம். ஆகையால் இறைவனுக்கு தடுத்து ஆட்கொண்ட நாதர் என்ற பெயரும் உண்டு.

இறைவனின் காலணிகள்

இறைவன் சுந்தரரை ஆட் கொள்ள வந்த போது அவர் அணிந்து வந்த காலணிகளை கோவிலின் வெளியில் விட்டு சென்றார். அந்த காலணிகளை மூலவர் அருகில் உள்ள கண்ணாடி கூண்டில் இன்றும் தரிசிக்க முடியும்.

அருணகிரிநாதர் திருப்புகழ்

அருணகிரிநாதர் இத்தலத்தில் முருகப் பெருமான் மயில்மீது நடனம் புரிதலைக் கண் குளிரக் கண்டு திருப்புகழ் ஒன்றும் பாடியுள்ளார்.

சுந்தரரின் முதல் பதிகம்

சுந்தரர் பாடிய இத்தலப் பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இவர் பாடிய முதல் பதிகம் என்ற சிறப்பும் இப்பதிகத்திற்கு உண்டு.

பதிகம்திருப்புகழ்
சுந்தரர் அருளிய இத்தலத்து பதிகம்
  1. பித்தாபிறை சூடீபெரு மானே
அருணகிரிநாதர் அருளிய இத்தலத்து திருப்புகழ்
  1. பலபல தத்துவ மதனை
மேலும் புகைப்படங்கள்