A
தகவல்களுக்கு எங்கள் வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்

மருந்தீஸ்வரர் திருக்கோவில், திருவிடையாறு (டி. எடையார்)

சிவஸ்தலம்

திருவிடையாறு (டி. எடையார்)

இறைவன்

மருந்தீஸ்வரர், இடையாற்றுநாதர், இடையாற்றீஸ்வரர், கிருபாபுரீஸ்வரர்

இறைவி

சிற்றிடைநாயகி

பதிகம்

சுந்தரர் - 1

மருந்தீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்
எப்படிப் போவது

திருக்கோயிலூரிலிருந்து திருவெண்ணெய்நல்லூர் வழியாக அரசூர் செல்லும் பாதையில் (SH68) சித்தலிங்க மடத்தையடுத்து இடையாறு உள்ளது. கோயில் சாலையோரத்தில் உள்ளது. விழுப்பரத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை செல்லும் தேசீய நெடுஞ்சாலையில் (NH 45) அரசூரை அடைந்து அங்கிருந்து வலதுபுறம் மாநில நெடுஞ்சாலை SH68ல் சென்றும் திருவெண்ணைநல்லூர் வழியாக திருவிடையாறு தலத்தை அடையலாம்.

நடு நாடு - பயண குறிப்புகள்

முதலில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருக்கோவிலூர் செல்லும் பேருந்தில் ஏறி அரகண்ட நல்லூர், திருக்கோவிலூர் தரிசித்து விட்டு, திருக்கோவிலூரில் இருந்து கடலூர் திருவெண்ணெய் நல்லூர் செல்லும் பேருந்தில் ஏறி முதலில் இடையாறு தலத்தையும், பிறகு திருவெண்ணெய் நல்லூர் சென்று, அங்கிருந்து திருமுண்டீச்சரம் சென்று தரிசனம் செய்து அரசூர் வழியாக மீண்டும் விழுப்புரம் அடையலாம்.

ஆலய முகவரி

அருள்மிகு மருதீஸ்வரர் திருக்கோவில்
மருதீஸ்வரர் தேவஸ்தானம்
டி.எடையார் அஞ்சல்
திருக்கோவிலூர் வட்டம்
விழுப்புரம் மாவட்டம்
PIN - 607203

ஆலய நேரம்

காலை :  6:00 - 11:00

மாலை :  5:00 - 8:00

கோவிலின் பசுமடம் அருகே அர்ச்சகரின் வீடு உள்ளதால், அர்ச்சகரை தொடர்பு கொண்டு மாலை 7 மணி வரை தரிசிக்கலாம்.
அருகில் உள்ள தலங்கள்
வரைபடம் – மருந்தீஸ்வரர் திருக்கோவில், திருவிடையாறு (டி. எடையார்)

பரிகாரத் தலம்

திருமண தடை நீங்க மருந்தீஸ்வரர் திருக்கோவில், திருவிடையாற் (டி. எடையார்)

கோவில் அமைப்பு
வரலாற்று பின்னணி

முற்காலத்தில் ஒரிசா மன்னர்கள் படையெடுப்பில் இந்த கோவில் அழிக்க பெற்று பின் சாளுக்கிய மன்னரால் மீண்டும் கட்டப்பட்டது. மூன்று நிலைகளை உடைய கோபுரத்துடன் இவ்வாலயம் அமைந்துள்ளது.

கோபுரம் மற்றும் நுழைவாயில்

கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நேரே 2 பலிபீடம் மற்றும் நந்தி ஆகிதவற்றைக் காணலாம். கொடிமரம் இல்லை. இறைவன் மேற்கு நோக்கிய சந்நிதியில் எழுந்தருளியுள்ளார்.

உள்சுற்று சன்னிதிகள்

ஆலயத்தின் உள்ளே இருக்கும் மண்டபத்தில் வள்ளி தெய்வயானை சமேத ஷண்முக சுப்பிரமணியர் சந்நிதி உள்ளது. இங்குள்ள முருகனின் (சண்முகர்) பெயரை கலியுகராமப் பிள்ளையார் என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது. உள்சுற்றில் பெரிய மருதமரம் உள்ளது. நவக்கிரக சந்நிதி, அகத்தீஸ்வர லிங்கம், சண்டேஸ்வரர், சப்தமாதாக்கள், பாலாம்ருத விநாயகர் முதலிய சந்நிதிகள் உள்ளன.

கோஷ்ட மூர்த்தங்கள்

கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தியும் துர்க்கையும் உள்ளனர். அம்மன் கிழக்கு நோக்கிய நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.

கோவில் சிறப்பு
திருமண தடை நீக்கும் தலம்

சுவாமி சந்நிதி மேற்கு நோக்கியும், அம்மன் சந்நிதி கிழக்கு நோக்கியும் அமைந்துள்ள தலங்கள் "திருமணத்தடை நீக்கும் தலம்" என்ற் சிறப்பைப் பெற்றவையாகும். அவ்வகையில் நெடுநாளைய திருமணத் தடை உள்ளவர்கள் இத்தலத்தில் சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து மாலை மாற்றி எடுத்து சென்றால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.

வழிபாடு செய்தவர்கள்

இத்தலத்தில் சுக முனிவர், பிரமன், அகத்தியர், சுந்தரர், மறைஞான சம்பந்தர் ஆகியோர் வழிபட்டுள்ளனர். சுகப்பிரம்ம மகரிஷி வழிபட்டதால் இத்தலத்தில் எப்போதும் கிளிகள் பறந்து கொண்டே இருக்கும்.

அகத்தீஸ்வரர்

அகத்தியர் இத்தலத்தில் லிங்கம் அமைத்து வழிபட்டார். இந்த லிங்கம் அகத்தீஸ்வரர் என அழைக்கப்படுகிறது. அகத்தியருக்கு தனி சிலையும் இங்குள்ளது.

சூரிய பூஜை

மாசி மாதம் 15,16 தேதிகளில் மாலை 5 மணி முதல் 5.15 வரை சூரியக்கதிர்கள் சுவாமியின் மீது பட்டு சூரிய பூஜை நடக்கிறது.

தல வரலாறு
சுகப்பிரம்ம முனிவர் கதை

கயிலையில் சிவபெருமான் உமாதேவியாருக்கு சிவ ரகசியத்தை உபதேசிக்கும் போது அவற்றை கிளி முகம் கொண்ட சுகப்பிரம்ம முனிவர் ஒட்டு கேட்டார். இதையறிந்த சிவன் முனிவரை பூமியில் பிறக்கும்படி சபித்தார். தவறை உணர்ந்த முனிவர் ஈசனிடம் சாப விமோசனம் கேட்டார். பூவுலகில் வேதவியாசருக்கு மகனாகப்பிறந்து பெண்ணை நதியின் தென்பகுதியில் அமைந்துள்ள இத்தலத்தில் இறைவனை பூஜித்து பூலோக வாழ்வு நீங்கப் பெற அவர் வரமளித்தார். சுகப்பிரம்ம முனிவரும் அவ்வாறே இத்தலம் வந்து மருத மரத்தின் கீழ் தவமிருந்து சாப விமோசனம் பெற்றார்.

சுந்தரர் பதிகம்

சுந்தரர் பாடிய இத்தலத்திற்கான பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. 39 திருத்தலங்களை வைப்புத்தலமாக இணைத்து, பதிகம் பெற்ற தலங்களையும் குறிப்பிட்டு, இடையாற்று பதிகம் பாடி, இத்தகைய தலங்களுக்கு இணையானது இடையாறு என்று பாடியுள்ளார். இத்தல இறைவனை வணங்கினால் 63 சிவ தலங்களை வணங்கியதற்கு சமம்.

பதிகம்
சுந்தரர் அருளிய இத்தலத்து பதிகம்
  1. முந்தையூர் முதுகுன்றங்
மேலும் புகைப்படங்கள்