தகவல்களுக்கு எங்கள் வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்

ஏமப்பேறூர் வேதபுரீஸ்வரர் திருக்கோவில் - வைப்புத் தலம்

சிவஸ்தலம்

ஏமப்பேறூர் (இன்றைய நாளில் ஏமப்பூர் என்று அழைக்கப்படுகிறது)

இறைவன்

வேதபுரீஸ்வரர்

இறைவி

பாலகுஜலாம்பாள்

பதிகம்

அப்பர் (6-70-3)

எப்படிப் போவது

விழுப்புரம் - திருக்கோவிலூர் சாலையில் உள்ள திருவெண்ணைநல்லூர் என்ற தலத்தில் இருந்து வடக்கே சுமார் 3 கி.மீ. தொலைவில் ஏமப்பூர் உள்ளது.

ஆலய முகவரி

அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோவில்
ஏமப்பூர்
திருக்கோவிலூர் வட்டம்
விழுப்புரம் மாவட்டம்
PIN - 631502

ஆலய நேரம்

காலை :  6:00 - 11:00

மாலை :  5:00 - 8:00

வரைபடம் – ஏமப்பேறூர் வேதபுரீஸ்வரர் திருக்கோவில் - வைப்புத் தலம்
பதிக குறிப்பு
பதிகப் பாடல் (6-70-3)

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 7-வது பதிகத்தில் 10-வது பாடலிலும், 6-ம் திருமுறையில் 70-வது பதிகத்தில் 9-வது பாடலிலும் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.


இடைமருது ஈங்கோய் இராமேச்சரம்
இன்னம்பர் ஏர் இடவை ஏமப் பேறூர்
சடைமுடி சாலைக்குடி தக்களூர்
தலையாலங்காடு தலைச்சங காடு
கொடுமுடி குற்றாலம் கொள்ளம்பூதூர்
கோத்திட்டை கோட்டாறு கோட்டுக்காடு
கடைமுடி கானூர் கடம்பந்துறை
கயிலாய நாதனையே காணலாமே.
பொழிப்புரை

இடைமருது, ஈங்கோய், இராமேச்சரம், இன்னம்பர், ஏர், இடவை, ஏமப்பேறூர், சடைமுடி, சாலைக்குடி, தக்களூர், தலையாலங்காடு, தலைச்சங்காடு, கொடுமுடி, குற்றாலம், கொள்ளம் பூதூர், கோத்திட்டை, கோட்டாறு, கோட்டுக்காடு, கடைமுடி, கானூர், கடம்பந்துறை ஆகிய இவற்றில் கயிலாய நாதனைக் காணலாம்.

கூடுதல் குறிப்புகள்
இப்பதிகத்தில் குறிப்பிடப்பட்ட பிற வைப்புத் தலங்கள்

இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடலில் கூறப்பட்டுள்ள ஏர், இடவை, சடைமுடி, சாலைக்குடி, தக்களூர், கோத்திட்டை, கோட்டுக்காடு ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.

தலத்தின் அடையாளம் பற்றிய மற்றொரு கருத்து

திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலை வழியில் சுமார் 8 கி.மீ. தொலைவில் திருநெய்ப்பேர் என்று ஒரு ஊர் உள்ளது. இங்குள்ள சிவாலயத்தில் உள்ள இறைவன் பெயர் வன்மீகநாதர். இத்தலமே ஏமப்பேறூர் என்று அழைக்கப்படும் தேவார வைப்புத் தலம் என்று குறிப்பிடுவோரும் உண்டு. 63 நாயன்மார்களில் ஒருவரான நமிநந்தியடிகளின் அவதாரத் தலம் இதுவாகும்.