தகவல்களுக்கு எங்கள் வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்
சுந்தரேஸ்வரர் திருக்கோவில், அத்தங்குடி, வைப்புத் தலம்

சிவஸ்தலம் பெயர்: அத்தங்குடி

இறைவன் பெயர்: சுந்தரேஸ்வரர்

இறைவி பெயர்: மீனாட்சி

பதிகம்: சம்பந்தர் (2-39-10)

எப்படிப் போவது

காரைக்குடியில் இருந்து சூரக்குடி வழியாக சுமார் 15 கி.மீ. தொலைவிலும், குன்றக்குடி முருகன் கோவிலில் இருந்து வடகிழக்கே சுமார் 7 கி.மீ. தொலைவிலும் அத்தங்குடி உள்ளது.

ஆலய முகவரி
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோவில்
அத்தங்குடி
அத்தங்குடி அஞ்சல்
திருப்பத்தூர் வட்டம்
சிவகங்கை மாவட்டம்
PIN - 630101
04565 281700
ஆலய நேரம்

காலை: 7:00 AM - 11:30 AM
மாலை: 4:00 PM - 7:00 PM

வரைபடம் - சுந்தரேஸ்வரர் திருக்கோவில், அத்தங்குடி
கோவில் அறிமுகம்

நகரத்தார்களால் நன்கு பராமரிக்கப்பட்டு வரும் இவ்வாலயம் சுமார் 1.15 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்திருக்கிறது. 7 நிலைகளை உடைய ராஜகோபுரத்தில் அழகிய வேலைப்பாடுடன் கூடிய சிற்பங்கள் காண்போரை வியக்க வைக்கும் விதமாக அமைந்துள்ளன. ராஜகோபுரத்திற்கு நேர் எதிரே வெளியில் ஆலயத்தின் திருக்குளம் அமைந்துள்ளது.

பதிகம் குறிப்பு

திருநாவுக்கரசரின் 2-ம் திருமுறையில் 39-வது பதிகத்தில் 10-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.

பதிகப் பாடல் (2-39-10)
குத்தங்குடி வேதிகுடி புனல்சூழ் குருந்தங்குடி தேவன்குடி மருவும்
அத்தங்குடி தண்டிரு வண்குடியு மலம்புஞ்சலந் தன்சடை வைத்துகந்த
நித்தன்னிம லனுமை யோடுங்கூட நெடுங்கால முறைவிட மென்று சொல்லாப்
புத்தர்புறங் கூறிய புன்சமணர் நெடும் பொய்களை விட்டு நினைந்துய்மினே.
பொழிப்புரை

குத்தங்குடி, வேதிகுடி, குருந்தங்குடி, தேவன்குடி, அத்தங்குடி, வண்குடி முதலான குடி என முடியும் தலங்கள் சிவபிரான் உமையம்மையாருடன் கூடி நெடுங்காலம் வீற்றிருப்பவர் என்று எண்ணி வழிபடாமல் பௌத்தர் சமணர் கூறும் பொய் மொழிகளை விட்டு அத்தலங்களை நினைந்து உய்மின்.

சிறப்புக் குறிப்பு
குடி என முடியும் தலங்கள்

இப்பாடலில் "குடி" என்று முடியும் பல வைப்புத் தலங்களை வகுத்து அப்பர் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாடலில் குறிப்பிடப்பட்ட தலங்கள்
  • குத்தங்குடி
  • வேதிகுடி
  • குருந்தங்குடி
  • தேவன்குடி
  • அத்தங்குடி
  • வண்குடி