Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

நெய்யாடியப்பர் கோவில், திருநெய்த்தானம், தஞ்சாவூர் மாவட்டம்

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருநெய்த்தானம் (தில்லைஸ்தானம்) - தஞ்சாவூர் மாவட்டம்
இறைவன் பெயர்நெய்யாடியப்பர்
இறைவி பெயர்இளமங்கையம்மை, பாலாம்பிகை
பதிகம்திருநாவுக்கரசர் - 5
திருஞானசம்பந்தர் - 1
சுந்தரர்
எப்படிப் போவது திருவையாற்றில் இருந்து மேற்கே 2 Km தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு
நெய்யாடியப்பர் திருக்கோவில்
தில்லைஸ்தானம் அஞ்சல்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 613203

திருநெய்த்தானம் சப்தஸ்தான தலங்களில் ஒன்றாகும். நெய்யாடியப்பர் ஆலயம் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. கிழக்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தவுடன் விசாலமான வெளிப் பிரகாரம் இருக்கிறது. இராஜகோபுரத்திற்கு நேரே உள்ள கொடிமரம், பலிபீடம், நந்தியைத் தாண்டி உள் வாயில் வழியாகச் சென்றால் மூலவர் நெய்யாடியப்பர் சந்நிதி ஆலயத்தின் உட்பிரகாரத்தில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. உள் பிரகாரம் சுற்றி வலம் வரும்போது சூரியன், ஆதிவிநாயகர், சனி பகவான், சரஸ்வதி, மகாலட்சுமி, காலபைரவர், சந்திரன், தட்சிணாமூர்த்தி ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. கருவறையில் மூலவர் நெய்யாடியப்பர் சற்றே ஒல்லியான மற்றும் உயரமான லிங்கத் திருமேனியுடன் நமக்குக் காட்சி தருகிறார்.

அம்பாள் சந்நிதி வெளிப் பிரகாரத்தில் வடக்கு நோக்கி அமைந்திருக்கிறது. அம்பாள் வாலாம்பிகை நின்ற கோலத்தில் நமக்கு அருட்காடசி தருகிறாள். அம்பாள் சிலை ஒரே கல்லில் வடிக்கப்பட்ட உருவமாகும். தட்சினாமூர்த்தி இங்கு நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். காமதேனு, சரஸ்வதி மற்றும் கெளதம முனிவர் இங்கு சிவபெருமானை வழிபட்டுள்ளனர்.

இத்தலத்தில் உள்ள முருகப்பெருமான் அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்றுள்ளார். மூலவர் கருவறை பிரகாரத்தில் மூலவருக்கு நேர் பின்புறம் மேற்குச் சுற்றில் இவர் சந்நிதி உள்ளது. முருகப்பெருமான் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு நின்ற திருக்கோலத்தில் மயிலுடன் காட்சி தருகிறார். இருபுறமும் தேவியர் எழுந்தருளியுள்ளனர்